Primary Menu

Top Menu

August 16, 18

ஓடும் காரிலிருந்து கீழறங்கி நடனமாடிய நடிகை ரெஜினா!!

நடிகை ரெஜினா கசான்ட்ரா ஓடும் காரிலிருந்து இறங்கி நடனம் ஆடியுள்ளார். இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.

 

கண்ட நாள் முதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ரெஜினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் அமைதியான பெண்ணாக வரும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

 

இதைத் தொடர்ந்து கவர்ச்சியாக களமிறங்கிய ரெஜினா தொடர்ந்து பல தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் மிஸ்டர் சந்திரமௌலி படம் வெளியானது.

 

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை ரெஜினா வெளியிட்டுள்ளார். அதில் ஓடும் காரில் இருந்து இறங்கி ஆங்கில பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடும் ரெஜினா அதே வேகத்தில் காரில் ஏறி சென்று விடுகிறார்.

 

மேலும் அந்த பதிவில், ‘தான் இன் மை ஃபீலிங்ஸ்’ சேலஞ்சை முடித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

 

பிரபல பாப் பாடகர் டிரேக்ஸின் ‘ஸ்கார்பியன்’ எனும் ஆல்பத்தில் இடம் பெற்றுள்ள பாடல் ‘இன் மை பீலிங்ஸ்’. கடந்த மாதம் இந்த ஆல்பம் வெளியாகி இணையத்தில் வைரலானது.

 

இந்த ஆல்பத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ‘இன் மை பீலிங்ஸ்’ சேலஞ்ச் மற்றும் கிகி சேலஞ்ச் என்ற பெயரில் சமூக வலைதளத்தில் சவாலாக வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

 

 

Comments
மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon