Primary Menu

Top Menu

September 26, 18

சகோதர, சகோதரர்களின் பாசத்தை வெளிப்படுத்தும் ரக்‌ஷா பந்தன் விழா

சகோதர, சகோதரர்களின் பாசத்தை வெளிப்படுத்தும் ரக்‌ஷா பந்தன் விழா, வரும் ஞாயிற்றுக் கிழமை (ஆக:26) கொண்டாடப்படுகிறது. ரக்‌ஷா பந்தன் ஏன் கொண்டாடப்படுகிறது, அதன் முக்கியத்துவம் என்ன என்பது குறித்த சிறப்புத் தொகுப்பை இப்போது பார்க்கலாம்.

 

வட இந்தியாவில் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ரக்ஷா பந்தன் திருவிழா, சகோதர, சகோதரிகளுக்கான ரத்த உறவை வலுப்படுத்தும் வகையிலும், திருமணமாகி புகுந்த வீட்டுக்குச் சென்றுவிட்ட பெண்கள் மீண்டும் தங்கள் பிறந்த வீட்டின் உறவை புதுப்பிக்கும் வகையிலும் கொண்டாடப்படுகிறது.

 

பாதுகாப்பு பந்தம்

 

ரக்ஷா பந்தன் என்றால் ‘பாதுகாப்பு பிணைப்பு’ என்றும், ‘பாதுகாப்பு பந்தம்’ என்றும் பொருள். இந்த நாளில், ஓர் ஆ‌ண் ரக்‌ஷா கயிறைக் கட்டிக் கொள்வது என்பது,

 

அவருக்குக் கயிறு கட்டிய அந்தப் பெண்ணை சகோதரியாகக்கொண்டு அவளின் வாழ்க்கை முழுவதுமான பாதுகா‌ப்‌பி‌ற்கு‌ம், நலத்துக்கும் என்றென்றும் காவலாக இருப்பேன் என்று உறுதி கூறுவதைப் போன்றதாகும்.

 

அதைப்போலவே கயிறைக் கட்டிய அந்தப் பெண்ணும் அவனுக்கு சகோதரியாகி அவனுடைய நலத்துக்கும், வளத்துக்கும் ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்யும் உறுதியை அளிப்பதாக இத்தினம் எடுத்துக்காட்டுகிறது.

 

மதங்களையும் தாண்டிய மனிதநேயம்

 

ஆவணி மாதப் பௌர்ணமி நாளில், கொண்டாடப்படும் ரக்ஷா பந்தன் திருவிழா இந்து பண்டிகை என்றாலும் கூட, இது மதங்களையும் தாண்டிய நேசத்தையும், சகோதரத்துவத்தையும் வளர்த்தெடுப்பதால் தற்போது அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

காட் பிரதர்ஸ்

 

இந்தியாவின் கலாசார பெருமையை எடுத்துக்கூறும் இந்த சிறப்பான நாளில் தனக்கு தெரிந்தவர்களை மட்டுமல்ல, அறிமுகமே இல்லாத காவலர்கள், ராணுவ வீரர்கள் என எல்லோரையும் கூட சகோதர, சகோதரிகளாக எண்ணி ராக்கி கயிற்றைக் கட்டும் வழக்கம் உண்டு.

 

குறிப்பாக, வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில், சகோதரிகளே இல்லாத ஆண்களை ‘காட் பிரதர்ஸ்’ (God Brothers) என்று குறிக்கும் விதமாக, அவர்களுக்குப் பல பெண்கள் ராக்கி கட்டுவார்கள்.

Comments

இன்றைய ராசிபலன் – 25.09.2018

மேஷம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon