Primary Menu

Top Menu

September 20, 18

சிங்கம் , புலி மற்றும் கழுதைப்புலி குட்டிகளுக்கும் பால் கொடுக்கும் விசித்தரமான நாய்!

சீனாவில் உள்ள உயிரியல் பூங்காவில், நாய் ஒன்று தனது குட்டிகளுடன், புலிக்குட்டி, சிங்கக்குட்டி, கழுதைப்புலிக்குட்டி ஆகியவற்றையும் பாலூட்டி பராமரித்து வருகிறது.

 

பீஜிங் நகரில் உள்ள உயிரியல் பூங்காவில் கோல்டன் ரீட்ரீவர் ரக தாய் நாய் இந்த பெருமையைப் பெற்றுள்ளது. 2 செர்பிய புலிக்குட்டிகள், ஒரு வெள்ளைப்புலிக்குட்டி,

 

2 கழுதைப்புலிக்குட்டிகள், ஒரு ஆப்பிரிக்க சிங்கக்குட்டி என 6 குட்டிகளுடன், தான் பிரசவித்த 2 குட்டிகளுக்கும் கோல்டன் ரீட்ரீவர் நாய் பாலூட்டி வருகிறது.

 

சிங்கக்குட்டியும், புலிக்குட்டியும் ஒன்றாக வளர்வது வழக்கம்தான் என்றாலும், 5 வித உயிரினங்களின் குட்டிகள் ஒன்றாக ஒரே அறையில் வளர்வது மிகவும் அபூர்வம் என்று உயிரியல் பூங்கா நிர்வாகிகளே வியப்பு நீங்காமல் கூறுகின்றனர்.

 

5 விதமான குட்டிகள் சுறுசுறுப்பாக விளையாடுவதைப் பார்ப்பதை விட , இவற்றையெல்லாம் பாலூட்டி வளர்க்கும் தாய் நாயை பார்க்க ஏராளமானோர் அங்கு திரண்டு வருகின்றனர்.

 

Comments

அமெரிக்கா போன திரும்ப வரமாட்டீர்கள்…

1. திரும்ப வரமாட்டீர்கள்…

இது கட்டாயம்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon