Primary Menu

Top Menu

September 20, 18

புதுச்சேரி கடலில் இறங்க தடை – கடலோர மீட்பு குழுவினர் முகாம்

கல்லுாரி மாணவர்கள் இருவர் இறந்த சம்பவத்தை தொடர்ந்து, கடலில் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடலோர மீட்பு குழுவினரும் முகாமிட்டுள்ளனர்.

 

புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் முக்கிய இடமாக, கடற்கரை சாலை உள்ளது. இங்கு, செயற்கை மணற்பரப்பை உருவாக்கும் பணி நடந்து வருகிறது.

 

இதன் காணமாக தற்போது, தலைமை செயலகம் எதிரில், கடற்கரையில் நீண்ட துாரம் வரையில் மணற்பரப்பு உருவாகியுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள், உள்ளூர் இளைஞர்கள் ஆர்வம் மிகுதியால் எல்லை மீறி கடலில் இறங்கி குளிப்பதால், அசம்பாவித சம்பவங்கள் நடக்கின்றன.

 

அதையடுத்து, சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, போலீசார் பாதுகாப்பு போடப்பட்டது.

 

கடலில் இறங்கி தத்தளிப்பவர்களை காப்பாற்ற, சுற்றுலா துறை சார்பில், நீச்சல் வீரர்கள் அடங்கிய கடலோர மீட்பு குழுவினரும் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

 

இந்நிலையில், கடந்த மாதம் 28ம் தேதி, லாஸ்பேட்டை பாலிடெக்னிக் மாணவர்கள் இருவர் மீட்பு குழுவினர் இல்லாத சமயத்தில், கடலில் இறங்கி குளித்த போது, கடல் அலையில் சிக்கி உயிரிழந்தனர்.

 

இந்த சம்பவத்தை தொடர்ந்து, கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, கடல் மணற்பரப்பில் யாரும் இறங்க கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், மணற்பரப்பு பகுதியில், கடலோர மீட்பு குழுவினர், மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

 

போலீசாரும் அங்கு தொடர்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

Comments

டிவி நடிகை நிலானி தற்கொலைக்கு முயற்சி மருத்துவமனையில் அனுமதி

நடிகை நிலானி, காந்தி லலித் தன்னை திருமணம்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon