Primary Menu

Top Menu

October 21, 18

புதுச்சேரியில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கான தேர்தல் அறிவிப்பு

புதுச்சேரியில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கான தேர்தல், வரும் ஆகஸ்ட் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடக்கிறது.

 

புதுச்சேரி இளைஞர் காங்., நிர்வாகிகளுக்கான தேர்தலுக்கு, வேட்புமனு தாக்கல் கடந்த 30ம் தேதி துவங்கியது. வேட்பு மனு தாக்கல் 2ம் தேதி மாலை 5 மணிக்கு முடிந்தது.

 

இதில், இளைஞர் காங்., தலைவர் பதவிக்கு அசோக்ராஜ், ஜெயதீபன், செய்னா, காளிமுத்து, ரமேஷ், ரகுபதி, லட்சுமிகாந்தன், வேல்முருகன், கார்த்திக் ஆகிய 9 பேர் போட்டியிடுகின்றனர்.

 

இதேபோல், 11 பொதுச் செயலாளர் பதவிக்கு, அமைச்சர் கந்தசாமியின் மகன் விக்னேஷ், காங்., எம்.எல்.ஏ தனவேலு மகன் அஷோக் ஷிண்டே, 4 பெண்கள், 2 மாற்றுத்திறனாளிகள், 4 சிறுபான்மையினர், 6 தாழ்த்தப்பட்டோர், மாகியை சேர்ந்த ஒருவர், காரைக்காலை சேர்ந்த 3 பேர் என மொத்தம் 27 பேர் போட்டியிடுகின்றனர்.

 

அதிக ஓட்டுகள் பெறுபவர் தலைவராக தேர்வு செய்யப்படுவார். இதுதவிர, ஒவ்வொரு தொகுதிக்கும் 15 பேர் கொண்ட கமிட்டி நிர்வாகிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

 

நேற்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது. நேற்று தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வரும் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் தேர்தல் நடக்கிறது.

 

14ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

 

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon