Primary Menu

Top Menu

September 21, 18

புதுச்சேரியில் கொல்கத்தா பெண்ணிடம் வழிப்பறி

சாலையில் நடந்து சென்ற கொல்கத்தா பெண்ணிடம் கைப்பையை பறித்துச் சென்ற வழிப்பறி கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

 

மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவை சேர்ந்தவர் ஸ்ரீகவுர் கோபால் சகா; ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்.

 

இவரது மனைவி அமிதா சகா (55). ஸ்ரீகவுர்கோபால் சகாவிற்கு உடல்நிலை சரியில்லாததால், வேலூரில் உள்ள மருந்துவமனையில் சிகிச்சைக்காக வந்திருந்தனர். சிகிச்சை முடிந்து, புதுச்சேரியை சுற்றிப்பார்க்க காரில் நேற்று முன்தினம் வந்தனர்.

 

இரவு 9.00 மணியளவில், ரோமண் ரோலன்ட் வீதியில் காரை நிறுத்திவிட்டு, நடந்து சென்றனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த இரண்டு வாலிபர்கள் அமிதாசகாவின் கைப்பையை பறித்துக்கொண்டு, மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

 

அந்த பையில் 2 மொபைல்போன், ரூ.12,000 ரொக்கப் பணம், அடையாள அட்டை ஆகியவை இருந்தன.

அமிதா சகா பெரியக்கடை போலீசில் புகார் அளித்தார். சப் -இன்ஸ்பெக்டர் வெற்றிவேல், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

 

ரோமண் ரோலன்ட் வீதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு, வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

Comments

இலவச அரிசி வழங்கும் பணியில் புதுச்சேரி குடிமை பொருள் சுறுசுறு

அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் இலவச...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon