Primary Menu

Top Menu

October 22, 18

கருணாநிதியின் உடல்நலம் விசாரிக்க குடியரசுத்தலைவர் சென்னை வருகை

காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியை பார்ப்பதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வருகிறார். இந்நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு நேற்று நலம் விசாரித்தார்.

 

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோருடன் சிறிது நேரம் உரையாடிய பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்திய அளவில் மிக மூத்த அரசியல் தலைவர் கருணாநிதி என குறிப்பிட்டார்.

 

இதேபோல, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும் மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலின், கனிமொழி ஆகியோரிடம் கேட்டறிந்தார்.

 

இந்நிலையில் கருணாநிதியை பார்ப்பதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு சென்னை வருகிறார்.

 

இதையொட்டி, விமான நிலையம் முதல் ஆழ்வார் பேட்டை வரை நேற்று பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. மேலும், மருத்துவமனையை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon