Primary Menu

Top Menu

September 26, 18

கலைஞர் கருணாநிதியின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் , பிரபலங்கள் இரங்கல்!

திமுக தலைவர் மு.கருணாநிதி இன்று மாலை 6:10 மணியளவில் சென்னை காவேரி மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

 

அவரது மறைவுக்கு தமிழகம் மற்றும் இந்தியா முழுவதிலிருந்தும் தலைவர்களும், பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் – திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்காக நாடே துக்கம் அனுசரிக்கிறது.

 

ராம்விலாஸ் பாஸ்வன் – சமூக நீதியைக் கட்டிக்காத்தவர் கருணாநிதி –

 

பன்வாரிலால் புரோஹித் – தமிழ் மொழிக்கு எழுத்தாளராகவும், நிர்வாகியாகவும் அவர் ஆற்றிய பணி அளவிட முடியாதது.

 

திருமாவளவன் – கருணாநிதி மறைவு ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கே ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு

 

வைகோ – அனைவரையும் கண்ணீர் கடலில் தத்தளிக்க வைத்துவிட்டார் கருணாநிதி

 

கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் முத்தரசன் – அரசியல் பாராமல் பெருந்தன்மையுடன் மெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க வேண்டும்.

 

கருணாநிதியின் இறுதிச் சடங்கிற்காக கேரள முதல்வர் பினராயி விஜயன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் உள்ளிட்ட தலைவர்கள் நாளை சென்னை வரவுள்ளனர்.

 

இதனிடையே சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகில், கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது.

 

அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்ய அனுமதி கோரி வழக்கு தொடரப் போவதாக திமுக சார்பாக கூறப்பட்டுள்ளது.

 

திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினா அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்ய அனுமதியளிக்கக் கோரி, வைகோ, முத்தரசன், திருமாவளவன், விஜயகாந்த் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Comments

வங்கிகளின் வாராக்கடன் குறைவு – அருண்ஜெட்லி

மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon