Primary Menu

Top Menu

September 25, 18

எத்தனால் உற்பத்தியால் பெட்ரோல் விலை ரூ.55 ஆக குறையும் – நிதின் கட்கரி

எத்தனால் உற்பத்தி ஆலைகளை பெட்ரோலியத்துறை அமைச்சகம் அமைத்து வருவதாகவும், இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 55 ரூபாயாக குறையும் என்று மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.

 

சத்தீஷ்கர் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் பெட்ரோலியத்துறை அமைச்சகம் எத்தனால் உற்பத்திக்காக 5 ஆலைகளை அமைத்து வருகிறது என்றார்.

 

மரக்கழிவுகள் மற்றும் மாநகர குப்பைகளில் இருந்து எத்தனால் தயாரிக்க உள்ளதாகவும், இதனால் டீசல் விலை லிட்டருக்கு 50 ரூபாயாக குறையுமென அவர் குறிப்பிட்டார்.

 

பெட்ரோல் விலை லிட்டருக்கு 55 ரூபாயாக குறையும் என்ற அவர், ஆண்டு ஒன்றுக்கு 8 லட்சம் கோடி ரூபாய்க்கு அரசு கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது என்றார்.

 

எத்தனாலை பெட்ரோல், டீசலுடன் கலந்து உபயோகிப்பதால் அரசுக்கு பணம் மிச்சமாகும் என்றும் கட்கரி தெரிவித்தார்.

 

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon