Primary Menu

Top Menu

October 15, 18

பிரான்சில் சரிவை சந்தித்து வரும் சைக்கிள் திட்டம்

பிரான்ஸ் நாட்டில் ஓகோவென்றிருந்த வாடகை சைக்கிள் தொழில் தற்போது பெரும் சரிவை சந்தித்துள்ளது.

 

2007-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொள்வோர் சைக்கிள்களை பாரிஸ் நகரில் எங்கு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ஓட்டிய பின்னர் எங்கும் நிறுத்திச் செல்லாம்.

 

எளிமையான, வாடகை குறைவான இந்த திட்டத்தில் இண்டரை லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைய 20 ஆயிரம் சைக்கிள்கள் நகரெங்கும் சுற்றி வந்தன.

 

ஆனால் சைக்கிள்களை எடுப்போர், அதனை ஓடும் ஆற்றில் வீசுவதும், திருடிச் செல்வதும் தொடர்ந்ததால், சைக்கிள்களை வாடகை விட்ட நிறுவனங்கள் தொழிலை நிறுத்திக் கொண்டன.

 

இப்போது பிரான்ஸ்- ஸ்பெயின் கூட்டு நிறுவனம் சைக்கிள்களை வாடகைக்கு விடும் குத்தகையை எடுத்துள்ளது.

 

ஆனாலும் பாரிஸ்வாசிகளை நம்பி தொழிலில் இறங்க அந்நிறுவனம் தயங்கி காத்திருக்கிறது.

 

அப்துல் காலம் பிறந்தநாள் மோடி,மம்தா ட்விட்டரில் கருத்து?

அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon