Primary Menu

Top Menu

August 16, 18

மணல் கடத்தலை தடுக்க ஆஷன் பிளானுடன் களமிறங்கும் போலீசார்

புதுச்சேரி மாநிலத்தில் மணல் கடத்தலை முற்றிலும் தடுக்க போலீஸ் துறை ஆக்ஷன் பிளானுடன் அதிரடியாக களம் இறங்கியுள்ளது.

 

புதுச்சேரி மாநிலத்தில் சங்கராபரணி, தென்பெண்ணை ஆற்றில் மணல் அள்ளுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதையும் மீறி மணல் கடத்தப்பட்டு வருகிறது.

 

இதை தடுக்க போலீசார், வருவாய் துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இருப்பினும் மணல் கடத்தல் தொடர்ந்து இரவு, பகலாக நடந்து வருகிறது.

 

இந்த நிலையில் புதுச்சேரியில் புதிதாக பொறுப்பேற்ற டி.ஜி.பி., சுந்தரி நந்தா, சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றில் மணல் கடத்தல் நடைபெறும் பகுதிகளை நேரடியாக பார்வையிட்டார்.

இதையடுத்து மணல் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

 

அடுத்த கட்டமாக மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தவும், மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும்,போலீசார் அதிரடி ஆக் ஷன் பிளான் ஒன்றை தீட்டி களம் இறங்கி உள்ளனர்.

 

ஆற்றங்கரையில் உள்ள வில்லியனுார், திருக்கனுார், பாகூர் போலீஸ் ஸ்டேஷன்களில் சட்டம் ஒழுங்கு போலீசாரும், ஐ.ஆர்.பி., போலீசாரும் இணைந்து இரவு, பகலாக மணல் கடத்தல் மாபியா கும்பலை பிடிக்க உள்ளனர்.

 

மணல் கடத்தல் மாபியா கும்பலை பிடிக்க டி.ஜி.பி., சுந்தரி நந்தா உத்தரவு பிறப்பித்துள்ள புதிய உத்தரவு:

 

  •  சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்.பி., மணல் கொள்ளை நடைபெறும் இடங்களை கண்டறிந்து கண்காணிப்பினை பலப்படுத்த வேண்டும்.

 

மணல் கொள்ளையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், போலீசாரின் கண்காணிப்பு பணி குறித்து, டி.ஜி.பி., க்கு தினமும் காலையிலும், இரவிலும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

 

  •  மணல் கடத்தல் தடுப்பு நடவடிக்கை இரண்டு ஷிப்ட்டாக நடைபெற உள்ளது. பகல் ஷிப்ட்டில் ஒரு உள்ளூர் காவலரும், இரவில் ஒரு உள்ளூர் காவலர் மற்றும் இரண்டு ஐ.ஆர்.பி., போலீசாரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுவர். இதன் மூலம் 24 மணி நேரமும் ஆற்றங்கரையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர்.

 

  •  அவசர எண்-100 அல்லது 1031 எண்ணிற்கு, மணல் கடத்தல் தொடர்பாக ரகசிய தகவல் கிடைத்ததும், சப் இன்ஸ்பெக்டர்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.பி., சம்பவ இடத்திற்கு சென்று, கிடைத்த தகவலை உறுதிப்படுத்திக்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

  •  கீழ் நிலை காவல் அதிகாரிகள் மணல் கடத்தலை தடுக்க, ஆய்வுக்கு செல்வதை சட்டம் ஒழுங்கு எஸ்.பி., திடீர் விசிட் அடித்து ஆய்வு செய்ய வேண்டும்.

 

  •  பகல் நேரங்களில் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் சப் இன்ஸ்பெக்டர் மணல் கடத்தல் தடுப்பு நடவடிக்கை குறித்து மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை கன்ட்ரோல் ரூமிற்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

 

  • இரவு நேரங்களில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை போலீஸ் கன்ட்ரோல் ரூம் பொறுப்பாளர், ரோந்து செல்லும் போலீசாரிடம் அறிக்கை பெற வேண்டும்.

 

  •  மணல் கடத்தல் வழக்குகளை அந்தந்த பகுதியில் உள்ள சீனியர் எஸ்.பி.,க்கள் கண்காணிப்பதோடு, அது தொடர்பாக விசாரணையும் நடத்த வேண்டும்.

 

  •  மணல் கடத்தலில் ஈடுபடும் மாபியா கும்பல் பற்றி தனி ஆவணத்தை, அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்களில் இனி பராமரிக்க வேண்டும். எத்தனை முறை சிக்குகின்றனர் என்பதை பதிவு செய்ய வேண்டும்.

 

இவ்வாறு டி.ஜி.பி., உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே மணல் கொள்ளையை தடுக்க முடியும் என்பதால், அந்தந்த போலீஸ் ஸ்டேஷன் எல்லைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

மணல் கடத்தல், பொதுவாக போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குப் பதிவு செய்து சப் இன்ஸ்பெக்டர் மட்டத்தோடு நின்றுவிடும். இனி சட்டம் ஒழுங்கு எஸ்.பி., வரை நேரடியாக கண்காணிக்கப்பட உள்ளதால், மணல் கடத்தல் கும்பல்கள் கலக்கம் அடைந்துள்ளன.

 

Comments
மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon