Primary Menu

Top Menu

October 15, 18

எண்ணெய் உற்பத்தி – டிரம்பின் கோரிக்கை நிராகரிப்பு

எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வலியுறுத்தியதை, ரஷ்யா மற்றும் பெட்ரோல் ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.

 

சவுதி அரேபியாவின் தலைமையில் ஈரான், ஈராக், குவைத் உள்ளிட்ட நாடுகள், பெட்ரோல் ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன.

 

பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்ந்து வருவதைத் தடுக்க, அதன் உற்பத்தியை அதிகரிக்குமாறு இந்த கூட்டமைப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப், அண்மையில் வலியுறுத்தியிருந்தார்.

 

இந்நிலையில், பெட்ரோல் ஏற்றுமதியாளர் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பெட்ரோலியத்துறை அமைச்சர்களின் கூட்டம் ஞாயிறன்று அல்ஜீரியா நாட்டில் உள்ள அல்ஜீயர்ஸ் நகரில் ( Algiers) நடைபெற்றது.

 

ரஷ்யா உள்ளிட்ட நட்பு நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இதில் பேசிய சவுதி அரேபியாவின் பெட்ரோலியத்துறை அமைச்சர் காலித் அல் ஃபாலி,

 

பெட்ரோலியப் பொருள்களின் விலையை சுத்திகரிக்கும் நிறுவனங்கள்தான் நிர்ணயிப்பதாக விளக்கமளித்தார். விலை உயர்வுக்கு தாங்கள் காரணமல்ல என்றும் குறிப்பிட்டார்.

 

அப்துல் காலம் பிறந்தநாள் மோடி,மம்தா ட்விட்டரில் கருத்து?

அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon