Primary Menu

Top Menu

September 22, 18

ரூபாய் மதிப்பின் சரிவிற்கு சர்வதேச விளைவுகளே காரணம் – அருண் ஜெட்லி

ரூபாய் மதிப்பு பற்றி வெளியாகும் செய்திகள் குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

 

மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெட்லி, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பின் மாறுபாட்டிற்குச் சர்வதேச விளைவுகளே காரணம் என்று கூறினார்.

 

சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மிக கடுமையான சரிவை சந்தித்துள்ளது.

 

நேற்று முன்தினம் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 71 ரூபாய் 58 காசுகளாக இருந்த நிலையில், நேற்று 71 ரூபாய் 87 காசுகளாக உள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து ரூபாய் மதிப்பு சரிவை சந்திப்பதன் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்தன.

 

சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வு, சீனா, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் போர் குறித்த அச்சம், அர்ஜென்டினா, துருக்கி வர்த்தக சூழல் ஆகிய காரணங்களால் டாலர் மதிப்பு உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

 

மேலும், உள்நாட்டில் வேலையின்மை, விலைவாசி உயர்வு, நடப்பு கணக்குப் பற்றாக்குறை, நிதிப்பற்றாக்குறை, உள்நாட்டுப் பொருளாதார சிக்கல்கள் ஆகியவற்றாலும் ரூபாயின் மதிப்பு உள்நாட்டிலேயே அதிக நெருக்கடிக்கு ஆளானது.

 

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு குறித்து டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

 

இந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, அமெரிக்காவுக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைவதற்கு உள்நாட்டு பொருளாதாரம் காரணமல்ல என்றார்.

 

சர்வதேச காரணிகளால் ரூபாயின் மதிப்பு சரிவடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். டாலருக்கு நிகரான மற்ற நாடுகளின் கரன்சி அதிகளவில் சரிவடைந்துள்ள நிலையில், ரூபாயின் மதிப்பு பலவீனம் அடையாமல் சிறப்பாக இருப்பதால் அதுபற்றி மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அருண் ஜெட்லி அறிவுறுத்தினார்.

 

ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் இதுவரை 32 கோடியே 41 லட்சம் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அருண் ஜெட்லி, அதில் 83 விழுக்காடு ஆதார் அட்டைகளுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

 

Comments

இணையத்தில் வைரலாகும் வர்மா பர்ஸ்ட் லுக் போஸ்டர்

விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon