Primary Menu

Top Menu

July 19, 18

புதுச்சேரியில் ஆண்டுக்கு 1000 பேர் புற்றுநோயால் இறப்பு – அதிர்ச்சி தகவல்

புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது முதல்-அமைச்சர் நாராயணசாமி புற்றுநோயினால் பாதிக்கப்படுவோர்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

 

புதுவை அரசு புற்று நோய் சிகிச்சைக்காக இலவச பரிசோதனை, சிகிச்சை மற்றும் மருந்துகளை அரசு மருத்துவமனை வாயிலாக வழங்குகிறது.

 

ஜிப்மரில் பிராந்திய புற்று நோய் மையத்தின் ஆதரவோடு சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.

 

மேலும் தேசிய திட்டத்தின் கீழ் ஆரம்பநிலையிலேயே கண்டுபிடிக்க முகாம்கள் நடத்தி வருவதால் ஆரம்ப சிகிச்சை தொடங்கவும், இறப்பு விகிதத்தை குறைக்கவும் வழி செய்துள்ளோம்.

 

பிராந்திய மருத்துவமனைகளில் பிரத்யேக பராமரிப்பு வார்டுகள் தொடங்கப்பட்டு, மருத்துவ நிபுணர்கள் வழிகாட்டுதலோடு செயல்பட்டு வருகிறது.

 

புற்று நோயால் புதுவையில் ஆண்டுக்கு ஆயிரம் பேர் இறக்கின்றனர். ஜிப்மரில் தனி பிரிவு இயங்குவதால் மத்திய அரசு, அரசு ஆஸ்பத்திரியில் புற்று நோய்க்கு தனி பிரிவு உருவாக்க அனுமதி அளிப்பதில்லை.

 

இருப்பினும் புற்று நோய் ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கான பிரிவை உருவாக்குவோம். புற்று நோய் சிகிச்சை மையம் உருவாக்கவும் அரசு நடவடிக்கை எடுக்கும்.

 

டோல்கேட் தடுப்புகளை கையால் உடைத்து சென்ற எம் எல் ஏ!!

டோல்கேட் பணியாளர்கள் தாமதப்படுத்தியதால்...

Leave a Reply