Primary Menu

Top Menu

September 25, 18

நான் செய்த குறும்பில் பிரசவ வலியில் துடிக்கும் பிரபல நடிகர்

’நான் செய்த குறும்பு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

 

இயக்குநர் பிரபு சாலமன் இயக்கிய ‘கயல்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் சந்திரன் தற்போது ரூபாய், கிரகணம், திட்டம் போட்டு திருடுற கூட்டம், பார்ட்டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

 

இந்நிலையில் நடிகர் சந்திரன் நடிக்கும் அடுத்த படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ’நான் செய்த குறும்பு’ என படக் குழுவினர் தலைப்பிட்டுள்ளனர். இப்படத்தை இயக்குநர் மஹாவிஷ்ணு இயக்கி தயாரிக்கிறார்.

 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஆண் கருவுற்று இருப்பதை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

 

மேலும் இப்படத்தில் ஆடி கார் ஷோரூமில் விற்பனைப் பிரிவில் பணியாற்றுபவராக சந்திரனும் ஐடி கம்பெனி நடத்தும் கோடீஸ்வர தொழிலதிபராக அஞ்சு குரியனும் நடிக்க இருக்கின்றனர்.

 

இப்படத்தின் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் இப்படம் ஜூனியர் என்ற ஹாலிவுட் படத்தின் தழுவலா என்று நடிகர் சந்திரனிடம் ட்விட்டரில் கேட்டுள்ளனர்.

 

அதற்கு பதிலளித்த அவர் இப்படம் ரீமேக்கோ தழுவலோ அல்ல என்று கூறியிருக்கிறார்.

 

 

Comments

வங்கிகளின் வாராக்கடன் குறைவு – அருண்ஜெட்லி

மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon