Primary Menu

Top Menu

June 24, 18

என்.ஜி.கே. ! தீபாவளி ரிலீஸ்

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் என்.ஜி.கே., இந்தாண்டு தீபாவளியன்று கண்டிப்பாக வெளியாகும் என சூர்யா தெரிவித்துள்ளார்.

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘என்.ஜி.கே.’ படத்தில், ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி ஆகிய இரண்டு பேர் நடித்துள்ளனர். மேலும், படத்தில் ஜெகபதி பாபு, இளவரசு, ராம்குமார் கணேசன், பாலா சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்தை, ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் வாங்கி வெளியிடுகிறது. படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என முன்னரே அறிவிக்கப்பட்டது. அதை, தற்போது மீண்டும் நடிகர் சூர்யா உறுதி செய்துள்ளார்.

Leave a Reply