Primary Menu

Top Menu

September 25, 18

நாசாவின் ஆசிரிஸ்-ரெக்ஸ் விண்கலம் மூலம் பென்னு விண்கல் படம் பிடிப்பு

நாசாவின் ஆசிரிஸ்-ரெக்ஸ் விண்கலம் மூலம் பென்னு விண்கல்லை படம்பிடிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த 2016 செப்டம்பர் 8ஆம் தேதி, ஆசிரிஸ்-ரெக்ஸ்(OSIRIS-REx) என்ற விண்கலத்தை நாசா விண்வெளிக்கு அனுப்பியது. இது புவிக்கு அருகில் இருக்கும் விண்கற்கள் குறித்து ஆய்வு செய்ய அனுப்பப்பட்டது.

 

இந்நிலையில் வரும் டிசம்பர் 3ஆம் தேதி, பென்னு விண்கல்லை அடைய உள்ளது. இந்த ஆய்வுகள் மூலம் சூரியக் குடும்பம் உருவாக்கத்தில் மறைந்திருக்கும் மர்மங்கள் குறித்து தெரியவரும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

 

கடந்த 17ஆம் தேதி ஆசிரிஸ்-ரெக்ஸ் விண்கலத்தில் உள்ள பாலிகேம் கேமரா, 1.4 மில்லியன் மைல் தொலைவில் இருந்து மெனு விண்கல்லை படம்பிடித்துள்ளது.

 

இந்த தொலைவு புவிக்கும், நிலவிற்கும் இடையிலான தொலைவின் 6 மடங்கிற்கு சமம் ஆகும்.

 

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon