Primary Menu

Top Menu

July 19, 18

இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத சென்செக்ஸ் அதிரடி உயர்வு

இந்திய பங்குச்சந்தைகளில் கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவிற்கு சென்செக்ஸ் அதிரடியாக உயர்ந்து புதிய வரலாறு படைத்துள்ளது.

 

காலையில் 180 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகத்தை துவக்கிய சென்செக்ஸ், முக்கிய பெரு நிறுவன பங்குகளின் உயர்வால் பிற்பகல் வர்த்தகத்தின் போது 400 புள்ளிகள் வரை அதிகரித்துள்ளது.

 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் மட்டும் ரூ.6,86,604 கோடிகள் வரை வர்த்தகமானது.

 

மும்பை பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ், எச்டிஎப்சி மற்றும் எச்டிஎப்சி வங்கி நிறுவன பங்குகள் உயர்வால் மட்டும் சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்ந்துள்ளது.

 

பகல் 12 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 413.89 புள்ளிகள் உயர்ந்து 36,679.82 புள்ளிகளாக உயர்ந்தது.

 

இதற்கு முன் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 29 ம் தேதி 36,444 புள்ளிகள் எட்டியதே புதிய சாதனையாக கருதப்பட்டது.

 

இந்நிலையில் இந்த சாதனை இன்று முறியடிக்கப்பட்டுள்ளது. நிப்டி 123.20 புள்ளிகள் உயர்ந்து 11,071.50 புள்ளிகளாக இருந்தது.

 

டோல்கேட் தடுப்புகளை கையால் உடைத்து சென்ற எம் எல் ஏ!!

டோல்கேட் பணியாளர்கள் தாமதப்படுத்தியதால்...

Leave a Reply