Primary Menu

Top Menu

September 25, 18

மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – 4 பேர் பலி

மும்பையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 4 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

மும்பை பரேல் பகுதியில் ஹின்ட்மதா திரையரங்கம் (Hindmata Cinema) அருகே உள்ள கிரிஸ்டல் டவர் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் இன்று காலை பெரும் தீவிபத்து ஏற்பட்டது.

 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு 14 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை விரைந்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். கிரேன் மூலம் அடுக்குமாடிக் குடியிருப்புக்குள் சிக்கியவர்கள் மீட்கப்பட்டனர்.

 

தீ விபத்தில் படுகாயங்களுடன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 4 பேர் உயிரிழந்தனர்.

 

இதனிடையே அந்த குடியிருப்பை சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர் தாம் பள்ளியில் பயின்ற தீத்தடுப்புக் குறிப்புக்களைப் பின் பற்றி பலரைக் காப்பாற்றி பாராட்டுகள் பெற்றுள்ளார்.

 

Comments

வங்கிகளின் வாராக்கடன் குறைவு – அருண்ஜெட்லி

மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon