Primary Menu

Top Menu

September 20, 18

மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் பாஜக – கருத்து கணிப்பு தகவல்

பிரதமர் மோடியின் செல்வாக்கு தொடர்ந்து சரிவு ஏற்படாமல் உள்ளதாகவும், வரப்போகும் தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 281 இடங்களை கைப்பற்றும் என கருத்து கணிப்புகள் வாயிலாக தெரியவந்துள்ளது.

 

இன்னும் சில மாதங்களில் நாடு பொதுத்தேர்தலை சந்திக்க உள்ளது. இதில் இரு பெரும் தேசிய கட்சிகளான காங்., பா.ஜ. வெற்றி வியூகம் வகுத்திட முனைப்பு காட்டி வருகின்றன.

 

இந்நிலையில் இந்தியாடுடேயின் மூட் ஆப் நேசன் இணைந்து கடந்த ஜூலை மாதம் வரை நடத்திய கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளது.

 

அதில் இன்றே பொதுத்தேர்தல் நடந்தால் பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 281 தொகுதிகளிலும், காங்.தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 122 தொகுதிகளிலும் மற்றவை 140 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

 

பிரதமர் மோடியின் செல்வாக்கு இன்று வரை சரிவு இல்லாமல் உள்ளார. இவ்வாறு அந்த கருத்து கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

 

மேலும் அருண்ஜெட்லி, ராஜ்நாத்சிங், சுஷ்மா சுவராஜ், மற்றும் நிதின்கட்கரி, நிர்மலா சீத்தாராமன் ஆகியோர் சிறந்த மத்திய அமைச்சர்களாகவும் மாநிலங்களில் சிறந்த முதல்வர் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும்,

 

இவருக்கு அடுத்தபடி முறையே நிதீஷ்குமார், அரவிந்த் கெஜ்ரிவால், மனோகர் பாரீகர், விஜய்ரூபாணி உள்ளிட்டோரும் கருத்து கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

 

Comments

விமானத்தை முந்திச் சென்ற மோட்டார் சைக்கிள்! – விநோதமான போட்டி

துருக்கியில் நடைபெற்ற வினோத போட்டியில்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon