Primary Menu

Top Menu

October 22, 18

21ம் நூற்றாண்டில் பணம் பண்ணும் மிகப்பெரிய தொழில்கள்!

அறிவியலில் மனித இனம் வளர்ந்ததாய் சொல்லப்படும் இன்றைய 21 ம் நூற்றாண்டிலும் பணம் பண்ணும் மிகப்பெரிய 13 தொழில்களாய் இருப்பவை:

 

1. போதைப்பொருள் 2. இராணுவ தளவாட விற்பனை 3. விபச்சாரம் 4. பெட்ரோலிய உற்பத்தி

 

5. போலியான பொருள் உற்பத்தி 6. விளையாட்டுத்துறை 7. சூதாட்டம் 8. வங்கித்தொழில் 9. மதுபான நிறுவனங்கள் 10. ஆபாச வலைதள வியாபாரம் 11. மருந்துத்துறை 12. திரைப்படங்கள் 13. ஆள்கடத்தல், உறுப்புகள் கடத்தல். காண்க:

 

மனிதகுல மேம்பாட்டை விடுத்து பணம் பண்ணும் குறிக்கோளே செல்வந்த நாடுகளின் முதலாளித்துவ குறிக்கோளாக இருக்கிறது.

 

செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் உந்து செல்ல ஒவ்வொரு கட்டத்திலும் நுணு நுணுக்கமாக திட்டமிடும் அறிவியல் உலகம் (காண்க காணொளி நிலநடுக்கத்தை தடுக்க முடியாவிட்டாலும் அது அடிக்கடி வரும் இந்தோனேசியா,

 

நேபாளம் போன்ற நாடுகளிலாவது மக்கள் இழப்பை தடுக்கும் வகையில் நிலநடுக்கத்தை தாங்கும் கட்டட அமைப்புகளை உருவாக்கலாமே.

 

பூமியிலிருந்து ஏறக்குறைய 8 கோடி கி.மீ தூரத்திலுள்ள செவ்வாய் கிரகத்திற்கு மங்கல்யான் விண்கலம் மைக்ரோ வினாடி சுத்தமாக அனுப்பும் தொழில் நுட்பம் படைத்த, 40 % ஏழையர் வாழும் இந்திய அறிவியல் உலகம்,

 

விபத்தினால் மனித உயிர்கள் அதிகம் இழக்கும் பேருந்துகளில், மகிழுந்துகளில் இருப்பதுபோல் காற்றுப்பை இல்லாவிட்டாலும், குறைந்த பட்சம் ஒவ்வொரு இருக்கையிலும் பாதுகாப்பான கச்சை (Seat belt) வசதியாவது செய்தால் மனித உயிரிழப்பு பெருமளவு குறையுமே.

 

படிகளில் கட்டாயமாக கதவுகள் இயங்கச்செய்து உயிர்ப்பலிகள் குறைக்கலாமே, குடும்பங்களில் இருள் அடையாமல் ஒளி ஏற்றலாமே.

 

கோக-கோலா vs டொரினோ

 

உள்நாட்டில் இல்லாத தொழில் நுட்பங்களைக் கொண்டுவந்தால் பரவாயில்லை. இங்கேதான் ஏற்கனவே மோர், இளநீர், பழரசம் போன்ற இயற்கை பானங்களும், டொரினோ போன்ற நல்ல செயற்கை பானங்களும் இருக்கின்றதே.

 

இங்கு எதற்கு நீரினை கொள்ளை அடித்து விவசாயத்தை, குடிநீரை அழிக்கும் அமெரிக்க கொக கோலா பானம்.

 

அய்யா கிணத்தைக் காணோம்.

 

தமிழகத்திலுள்ள 390000 ஏரி, குளங்கள் 180000 கிணறுகள் இன்று வானம் பார்த்த பூமியாக்கப்பட்டுவிட்டன.

 

கேரளாவில் பிளாச்சிமடா, உத்தரபிரதேசத்தில் மெக்திகனி, மகாராஷ்டிராவில் வதா, தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்திலுள்ள படமாத்தூர், கொளத்தூர் (தற்காலிகமாக தப்பித்திருக்கிறது),

 

தாமிரபரணி ஆற்றுப்படுகை ஜெயங்கொண்ட சோழபுரம், விக்கிரவாண்டி, மதுரை விளாங்குடி (வைகை ஆற்றுப்படுகை) ஆகிய இடங்களில் பல்லாயிரக்கணக்கான அடிதூரம் நிலத்திற்குள் தோண்டப்பட்டு கோக் நிறுவனத்துக்காக நீர் உறிஞ்சப்படுகிறது.

 

நாம் கண்ணெதிரிலேயே பகல்கொள்ளை நடைபெறுகிறது. நாமும் கையாலாகா நிலையில் வெறுமனே வேடிக்கைப் பார்ப்பதோடு மட்டும் நமது பணியை முடித்துக் கொள்கிறோம். காண்க:

 

திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டுமே கடந்த 15 ஆண்டுகளில் (2000-2015) மட்டும் 35,000 கிணறுகள் மூடப்பட்டுள்ளன. மூடப்பட்டு விளை நிலங்கள், விலை நிலங்களாக மாற்றப்பட்டு விட்டன. காண்க:

 

வறட்சி என்பது இயற்கையானதே ஆனால், நீர் வள மேம்பாடு என்பது அரசு திட்டமிடவேண்டிய ஒன்றே. காமராசர் திட்டமிட்டார், அணைகள் கட்டினார். இப்போது புதிதாக கட்டாவிட்டாலும் இருக்கும் நீர்வளத்தையாவது காக்க வேன்டாமா.

 

அணைகள், கண்மாய்கள், ஆறுகளை தனியாருக்கு விட்டுவிட்டு குடிசை வீடுகளில் மழைநீர் சேமிக்க சொல்வது யாரை ஏமாற்ற?

 

தீபாவளி தள்ளுபடிகளை நம்பவேண்டாம்?

தீபாவளி போன்ற பண்டிகைகள் வந்தாலே...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon