Primary Menu

Top Menu

September 21, 18

முதல்வன் பட பாணியில் மு.க.ஸ்டாலினை விமர்சித்த அமைச்சர் ராஜீ

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜீன் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் முதல்வன். இத்திரைப்படத்தில் நடிகர் அர்ஜீனுக்கும் , ரகுவரனுக்கும் இடையில் வரும் ஒரு வசனம் மிகவும் பிரபலமானது.

 

அதில் ரகுவரன் ஒருநாள் முதல்வனாக இருந்து பார் என அர்ஜீனை நோக்கி ரகுவரன் கூறுவார்.

 

அதுபோல் ஒரு மணி நேரமாவது முதலமைச்சர் பதவியில் இருந்து விட வேண்டும் என்கிற எண்ணத்தில் மு.க.ஸ்டாலின் ஸ்ரீரங்கம் கோவில் சென்றதாக அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

 

மதுரை மேலமாசி வீதியில் இளைஞர், இளம்பெண்கள் பாசறை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

 

இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, ஸ்ரீரங்கத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிரசாதம் வழங்கப்பட்ட அதே இடத்தில் வைத்து மு.க.ஸ்டாலின் பிரசாதம் பெற்றிருப்பதாகவும், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தான் இதற்கு ஏற்பாடு செய்ததாகவும் தெரிவித்தார்.

 

Comments

விமானத்தை முந்திச் சென்ற மோட்டார் சைக்கிள்! – விநோதமான போட்டி

துருக்கியில் நடைபெற்ற வினோத போட்டியில்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon