Primary Menu

Top Menu

September 25, 18

மதுரையில் “ஓவியம் என்னும் நுண்கலை இரசனைகளும் போக்குகளும்”

மதுரையில் “ஓவியம் என்னும் நுண்கலை இரசனைகளும் போக்குகளும்” என்ற தலைப்பில் கருத்துரை கூட்டம் நடந்தது.
.
மதுரை தவிட்டுச்சந்தையில் உள்ள சௌராஸ்ட்ரா சேம்பர் ஆப் காமர்ஸ் அரங்கில் ஆகஸ்ட் 18ம் தேதி இந்நிகழ்வு நடந்தது.
.
நிகழ்வினை கவிஞர் திரு.தமிழ்ப்பித்தன் அருமையாகத் தொடங்கி வைத்தார்.

கருத்துரை வழங்கியவர்கள் அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் இரா.பிரபாகன் அவர்களும் மற்றும் ஓவியர் திரு. ரவிபேலட் அவர்களும் ஓவியங்களின் நுணுக்கங்கள், ரசனைகள், தன்மைகள், பழங்கால ஓவியங்கள் என ஓவியத்தின் பல்வேறு கூறுகளை பார்வையாளர்களுக்கு பகிர்ந்து கொண்டனர்.

ஓவியர் ரவி அவர்கள் தற்கால டிஜிட்டல் ஆர்ட் பற்றியும் அதனை எளிமையாக வரையும் முறை பற்றியும் அருமையாக விளக்கிக் கூறினார்.

பல கல்லூரி மாணவ மாணவிகள், கல்லூரி பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

கவிஞர் சென்றாயன் நன்றியுரை கூற நிகழ்வு இனிதாக நிறைவேறியது.
.
நிகழ்வினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது திரு.தேனிவிசாகன், தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை.

Comments

அறுபதாம் வயதில் அறுபது பனைவிதை நடவு !

மதுரையில் பனைமர விதைகள் நட்டு வைத்து...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon