Primary Menu

Top Menu

September 26, 18

மன்மத லீலை

தீராத விளையாட்டுப் பிள்ளை மன்மத லீலை பற்றி எழுதினால் ஏதாவது ஏடாகூடமாக இருக்கும் என்று எண்ணிவிடாதீர்கள். இது ஒன்றும் பாலச்சந்தர் பட விமர்சனமும் அல்ல ‘அந்த’ மாதிரி பதிவும் அல்ல.

 

இன்றைய காதல் கவிகளின் அகராதி மகாகவி காளிதாசரின் குமார சம்பவத்தை தமிழில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது, நலம் வெளியீடாக. சமஸ்க்ருதம் தெரிந்தால் மூலத்தை படித்து காதல் ரசத்தை பருகி இன்புறலாம்.

 

நான் அந்த தேவ பாஷையில் கைநாட்டு என்பதால் கிடைத்தை படித்து பார்த்தேன். தமிழ் மொழியாக்கத்திலும் அந்த காதல் சிருங்கார ரசம் ததும்புகிறது. வேறு யாராவது மொழி பெயர்த்திருக்கிரார்களா என்று தெரியவில்லை.

 

சிவனார் தியானம் செய்யும் இடத்தில் தைரியமாக நுழைந்த மன்மதனின் கரும்பு வில் கொண்டு மலரம்பு ஏவும் விஸிட் எப்படி அந்த எழில் கொஞ்சும் பர்வத பகுதியை காதல் பீடித்து கொண்டு உலுக்குகிறது என்பதை சொற்கள் பிரயோகித்து நம் மீது தொடுத்திருக்கிறான் காளிதாசன்.

 

இந்தப் பதிவின் ஆரம்பத்தில் ‘அர்’ விகுதியில் ஆரம்பித்து ‘அன்’ விகுதியில் முடித்துவிட்டேன். சே. என்னமாய் ரசித்திருக்கிறான். அந்தப் புஸ்தகத்திலிருந்து சில பகுதிகள் கிழே..

 

தன்னுடைய மலர்வில்லை நாண் ஏற்றி, ரதியுடன் கூட அந்த இடத்துக்கு மன்மதன் வந்தபோது, எல்லா இடங்களிலும் எல்லா உயிர்களும் தங்கள் செயல்களால் காதலின் உச்சியை எட்டிய பேராவலில் திளைத்தார்கள்.

 

ஒரே மலர்ப் பாத்திரத்தில் உள்ள தேனை, ஓர் ஆண் தேனீ தன்னுடைய காதலியை முதலில் குடிக்கவிட்டு, பிறகு, அதைப் பின்தொடர்ந்து தானும் குடித்தது.

 

ஓர் ஆண்மான், தான் தொட்டதால் உணர்ச்சி பொங்கித் தன் கண்களை மூடிக்கொண்டிருக்கும் பெண்மானை, தன் கொம்பால் கீறியது.

 

தாமரை மலர்களின் மகரந்தத்தால் குளத்தில் உள்ள நீர் நறுமணமாக்கப்பட்டது. ஒரு பெண் யானை காதலினால் தூண்டப்பட்டு அந்த நீரைத் தன் வாயில் எடுத்து அதை ஆண் யானைக்கு கொடுத்தது.

 

ஒரு சக்கரவாஹப் பறவை, தான் பாதி கடித்து மென்ற மிகுதியான தாமரைத் தண்டைத் தன் மனைவிக்குக் கொடுத்து அதை கௌரவித்தது.

 

கின்னரப் பெண்களுடைய முகங்களில் வரையப்பட்ட நிலைச் சித்திரங்கள், வியர்வைத் துளிகளால் சிறிது அழிந்தே இருந்தன. மலர்களிலிருந்து எழுந்த மதுவை அருந்தியதால் அவர்களுடைய கண்கள் சிவந்து பிரகாசித்தன. பாடிக் கொண்டிருக்கும் காதலிகளின் முகத்தில் கிம்புருஷர்கள் முத்தமிட்டார்கள்.

 

குமார சம்பவம் தமிழில் அ.வெ.சுகவனேஸ்வரன்

——————

இப்படியே காதல் சம்பவங்களின் தொகுப்பு நிறைய இடங்களில். புத்தகம் முழுவதும் கையொடிய டைப் செய்ய நேரமில்லாததால் மேற்கண்ட ஒரு சிறிய பிட். மன்மதன் தன்னுடைய மலரம்பை ரதியை நோக்கி எய்வதாக நிறைய சித்திரங்கள், சிற்பங்கள் பார்த்திருக்கிறோம்.

 

இலக்கு எது தெரியுமா? ரதியின் ஸ்தனங்களாம். மன்மத சிற்பத்தின் அருகில் சென்று மன்மதனுக்கு பதிலாக அவன் கையினூடே நாம் குறிபார்த்தால் இது தெரியும் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.

 

Comments

மதுரை நகரின் சிறப்புகள்

இந்தியாவின் பழமை வாய்ந்த நகரங்களில்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon