Primary Menu

Top Menu

July 19, 18

நெற்றியில் சந்தனம் வைத்த தனது மகள் கல் வீச்சிலிருந்து தப்பினார் – தந்தை கவலை

கேரளாவில், குறும் படத்தில் நடிப்பதற்காக நெற்றியில் சந்தன பொட்டு வைத்த, 8ம் வகுப்பு இஸ்லாம் மாணவியை மதரசா நீக்கியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

 

இது குறித்து கேரளாவை சேர்ந்த உமர் மலயில் என்பவர் பேஸ்புக்கில் தனது மகளின் படத்தை வெளியிட்டு எழுதி இருப்பதாவது:

 

எட்டாம் வகுப்பு படிக்கும் எனது மகள் ஹென்னா, குறும் படத்தில் நடிப்பதற்காக, நெற்றியில் சந்தன பொட்டு வைத்துள்ளார். இதற்காக அவரை பள்ளியில் இருந்து மதரசா நீக்கியுள்ளது.

 

நல்லவேளை, என் மகள் கல் வீச்சு தண்டனையில் இருந்து தப்பி விட்டார். ஹென்னா அனைத்து துறையிலும் ஆர்வம் உடையவர்.

 

படிப்பிலும் சுட்டி. கலை விழாக்களில் பல்வேறு பரிசுகளை பெற்றவர். வகுப்பில் முதலிடத்தில் இருப்பவர். மதரசா பொது தேர்வில் ஐந்தாம் இடம் பிடித்தவர். இவ்வாறு, பேஸ்புக்கில் கூறி உள்ளார்.

 

இத்தகவலை, 2,800 பேர் ஷேர் செய்துள்ளனர். சமூக வலை தளங்களில் இந்த விஷயம், வேகமாக பரவி வருகிறது.

 

டோல்கேட் தடுப்புகளை கையால் உடைத்து சென்ற எம் எல் ஏ!!

டோல்கேட் பணியாளர்கள் தாமதப்படுத்தியதால்...

Leave a Reply