Primary Menu

Top Menu

July 19, 18

மல்லையாவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய லண்டன் கோர்ட் அனுமதி

இந்திய வங்கிகளில் கடன் வாங்கி, அவற்றை திருப்பிச் செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பியோடிய தொழிலதிபர், மல்லையாவின் பிரிட்டன் சொத்துக்களை பறிமுதல் செய்ய லண்டன் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.

 

கர்நாடகாவைச் சேர்ந்த மதுபான தொழிலதிபர், விஜய் மல்லையா ‘கிங் பிஷர்’ விமான சேவை நிறுவனம் துவங்க, 13 வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கி, திருப்பி செலுத்தாமல், ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு தப்பியோடினார்.

 

அவரை இந்தியா அழைத்து வர, மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

 

இதனிடையே, மல்லையாவின் சொத்துக்களை முடக்க அனுமதி கோரி பிரிட்டன் ஐகோர்ட்டின் வர்த்தக கிளை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 

இதனை விசாரித்த கோர்ட், பிரிட்டனில் உள்ள அவரது சொத்துக்களை முடக்கவும், லண்டனில் உள்ள மல்லையாவின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தவும், அனுமதி வழங்கியுள்ளது.

 

டோல்கேட் தடுப்புகளை கையால் உடைத்து சென்ற எம் எல் ஏ!!

டோல்கேட் பணியாளர்கள் தாமதப்படுத்தியதால்...

Leave a Reply