Primary Menu

Top Menu

September 25, 18

ஜாமீனில் விடுதலையான தூத்துக்குடி சோபியா குறித்து புது தகவல்கள்

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனுடன் தகராறில் ஈடுபட்ட சோபியா , சமூக வலைத்தளங்களில் தீவிரமாக செயல்பட்டு , ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக பல்வேறு கருத்துகளையும் பகிர்ந்து வந்தார்.

 

மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி, சமூக செயற்பாட்டாளர் வளர்மதி, குறும்பட இயக்குநர் திவ்யபாரதி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட போது அவர்களுக்கு ஆதரவாக கருத்துகளை பகிர்ந்தவர் சோபியா.

 

தமிழிசை சவுந்தரராஜனுடன் விமானத்தில் பயணம் செய்யும் போது, விமானத்தில் இருக்கிறேன்…. பாசிச பாஜக ஆட்சி ஒழிக என கத்த வேண்டும் போல இருக்கிறது.. அவ்வாறு செய்தால் என்னை விமானத்தில் இருந்து வெளியே தூக்கி வீசி விடுவார்களோ? என ட்வீட் செய்திருந்தார்.

 

ஆனால் சோபியா கைதான சில நிமிடங்களில் இந்த ட்வீட் மட்டும் நீக்கப்பட்டிருந்தது. பிறகு, ஜாமீனில் வெளியான சில நிமிடங்களில் சோபியாவின் ட்விட்டர் கணக்கு மாயமானது.

 

ஆனால் சில நிமிடங்களிலேயே ட்விட்டர் கணக்கு மீண்டும் வந்தது. ஏற்கனவே ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட ஃபாலோயர்கள் இருந்த நிலையில் மீண்டு வந்த கணக்கில் ஃபாலோயர்கள் குறைவாகவே காட்டுகிறது.

 

சோபியாவின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதா? அல்லது அவரே கணக்கை நீக்கினாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon