Primary Menu

Top Menu

September 22, 18

கருணாநிதி நினைவஞ்சலி கூட்டம் – இந்திய அரசியல் தலைவர்கள் பங்கேற்பு

சென்னையில் நடக்கவுள்ள கருணாநிதி நினைவஞ்சலி கூட்டத்தில் பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட்ட தேசிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

 

* சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் வரும் 30ஆம் தேதி ‘தெற்கில் உதித்தெழுந்த சூரியன்’ என்ற தலைப்பில் நடைபெறும் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டத்தில் அகில இந்தியத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

 

* பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான குலாம்நபி ஆசாத், முன்னாள் பிரதமர் தேவகவுடா,தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

 

* ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, பிஹார் முதலமைச்சர் நிதிஷ்குமார், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா ஆகியோரும் கலந்துகொள்ள உள்ளனர்.

 

* புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் கே.எம். காதர் மொய்தீன், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

 

கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்க மாட்டார் என அக்கட்சியின் எம்.பி சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் இந்த கருத்தை அவர் பதிவிட்டுள்ளார்.

 

Comments

நடிகரை ஹோட்டல் அறைக்கு வரச்சொன்ன மைனா படநடிகை!

அமலாபால், விதார்த் நடிப்பில் கடந்த 2010ல்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon