Primary Menu

Top Menu

September 21, 18

அண்ணனை இயக்க ஆசைப்படும் தம்பி!

சூர்யாவின் ‘2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனம் தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘கடைக்குட்டி சிங்கம்’ படம் நாளை வெளியாகிறது.

 

‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் புரமோஷனுக்காக ஃபேஸ்புக்கில் ரசிகர்களுடன் சமீபத்தில் உரையாடினார் கார்த்தி.

 

அப்போது, ‘சூர்யாவுடன் இணைந்து எப்போது நடிக்கப்போகிறீர்கள்?’ என ஒரு ரசிகர் கேட்டதற்கு, “அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என எனக்கும் ஆசை இருக்கிறது.

 

எங்கள் இருவருக்காகவும் சேர்த்து பாண்டிராஜ் சார் ஒரு கதை எழுதி, அது நன்றாக அமைந்தால் நிச்சயம் இருவரும் இணைந்து நடிப்போம் என்று தெரிவித்துள்ளார்.

 

அதுமட்டுமல்ல, “எனக்கே என் அண்ணனை இயக்கும் ஆசை இருக்கிறது. எதிர்காலத்தில் எப்படி அமையப் போகிறது என்பதைப் பார்க்கலாம்” எனத் தெரிவித்துள்ளார் கார்த்தி.

 

ரேக்ளா ரேஸில் வெற்றிபெற்ற கார்த்திக்கு பரிசு கொடுக்கும் சிறப்பு விருந்தினராக கடைக்குட்டி சிங்கம் படத்தில் சூர்யா நடித்துள்ளார்.

 

Comments

அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்

மாடல் அழகியான சாக்‌ஷி அகர்வால், ‘யோகன்’...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon