Primary Menu

Top Menu

September 26, 18

பா.ஜ.க.வில் இணைய மலையாள நடிகர் மோகன்லால் திட்டம்

பிரபல மலையாள நடிகர் மோகன்லால் பா.ஜ.,வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2019 லோக்சபா தேர்தலில் அவரை திருவனந்தபுரம் தொகுதியில் களமிறக்கவும் பா.ஜ., திட்டமிட்டுள்ளது.

 

டெல்லியில் பிரதமர் மோடியை, பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நேற்று (செப்.3) சந்தித்து பேசினார். பிரதமர் இல்லத்தில் நடந்த இச்சந்திப்பு 1 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

 

இந்நிலையில், மோகன்லால் பா.ஜ.,வில் இணைய உள்ளதாகவும், 2019 லோக்சபா தேர்தலில் கேரளாவில், மோகன்லாலை களமிறக்க பா.ஜ., திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

திருவனந்தபுரம் தொகுதியில் மோகன்லால் போட்டியிடுவார் என்றும், இதனால் கேரளாவில் பா.ஜ., பலம் பெரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

Comments

தேவர் மகன்–2 படத்தை இயக்க கமல்ஹாசன் முடிவு?

நடிகர் கமல்ஹாசனும் தேவர் மகன் படத்தின்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon