Primary Menu

Top Menu

October 20, 18

ரயிலிலே ஷாப்பிங் செய்யும் வசதி விரைவில் அறிமுகம்

பொதுவாக பேருந்து பயணத்தைவிட, ரயில் பயணம் சுகமானதுதான். நீண்ட தூரம் பயணம் செய்யும் பெரும்பாலானவர்களின் முதல் சாய்ஸ் ரயிலாகத்தான் இருக்கும்.

 

இந்தவகையில், பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்திய ரயில்வே சார்பில் வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு, மத்திய, வடகிழக்கு என மண்டல வாரியாக ரயில்கள் இயக்கப்படுகின்றன.

 

இந்நிலையில், ரயில் பயணிகளைக் கவரும் வகையில் பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்த ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இந்த வகையில், ரயிலிலேயே ஷாப்பிங் செய்யும் வசதி விரைவில் அறிமுகமாகவுள்ளது.

 

நாட்டிலேயே முதல்முறையாக இந்த வசதியை மத்திய ரயில்வே அறிமுகப்படுத்தவுள்ளது.

 

மத்திய ரயில்வே சார்பில் மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து பல பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக, மும்பையிலிருந்து நாட்டின் முக்கிய நகரங்களுக்கு நாள்தோறும் பல ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

 

இந்நிலையில் மும்பையிலிருந்து இயக்கப்படும் சென்னை எக்ஸ்பிரஸ், கோனார்க் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில ரயில்களின் ஏ.சி. பெட்டிகளில் ஷாப்பிங் வசதி அறிமுகமாகவுள்ளது.

 

இதன்படி, பயணிகள் அழகுசாதனப் பொருட்கள், பயணத்தின்போது தேவைப்படும் சோப்பு, டூத் பேஸ்ட் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியும்.

 

சோதனை முயற்சியான இந்த திட்டம் வெற்றி பெற்றால், தொடர்ந்து பிற ரயில்களிலும் இந்த வசதி ஏற்படுத்தப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon