Primary Menu

Top Menu

September 21, 18

நாட்டின் தொழிற்துறை உற்பத்தி 7சதவீதம் வளர்ச்சி

கடந்த ஜூன் மாதம், நாட்டின் தொழில் துறை உற்பத்தி, 7 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, மே மாதம், 3.2 சதவீதம்; மறுமதிப்பீட்டில், 3.9 சதவீதமாக இருந்தது.

 

நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் – ஜூன் காலாண்டில் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, 5.2சதவீதமாக உள்ளது. கடந்த ஜூன் மாதம், தயாரிப்பு துறை உற்பத்தி, 6.9 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது.

 

இது, கடந்த ஆண்டு, இதே மாதத்தில், 0.7 சதவீதம் பின்னடைவை கண்டிருந்தது.இதே காலத்தில், மின் துறை உற்பத்தி, 2.1 சதவீதத்தில் இருந்து, 8.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.

 

அதுபோல, நிலக்கரி துறையின் வளர்ச்சியும் சிறப்பாக இருந்தது. இத்துறை, கடந்த ஜூன் மாதம், 6.6 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது.

 

இது, கடந்த ஆண்டு இதே மாதத்தில், 0.1 சதவீதமாக இருந்தது. தொழில் துறை உற்பத்தி, 23 துறைகள் செயல்படும் விதத்தை வைத்து மதிப்பிடப்படுகிறது.

 

கடந்த ஜூன் மாதம், பெரும்பான்மை துறைகள், சிறப்பாக வளர்ச்சி கண்டுள்ளன. இதனால், ஒட்டுமொத்த தொழில் துறை உற்பத்தி, அபார வளர்ச்சி கண்டுள்ளது.

 

Comments

அமேசான் வலைத்தளத்தில் ஒன்பிளஸ் 6டி டீசர் பதிவு

ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த ஃபிளாக்ஷிப்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon