Primary Menu

Top Menu

October 20, 18

இன்றைய ராசிபலன் – 20.09.2018

மேஷம்: சந்தர்ப்ப, சூழ்நிலையை புரிந்து கொண்டு சமயோஜிதமாகப் பேசும் சாமர்த்தியம் வரும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.

 

வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர் கள் ஒத்துழைப்பார்கள். சாதிக்கும் நாள்.

 

ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும்.

 

வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர் கள். மனசாட்சிபடி செயல்படும் நாள்

 

மிதுனம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் சில விஷயங்களில் திட்ட மிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக் கும்.

 

வியாபாரத்தில் வேலை யாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

 

கடகம்: தன் பலம் பலவீனத்தை உணருவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும்.

 

வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் மனம் விட்டுப் பேசுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

 

சிம்மம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.

 

வியாபாரத்தில் புது திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

 

கன்னி: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சொந்த-பந்தங்களின் சுயரூபத்தை தெரிந்து கொள்வீர்கள்.

 

பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். கனவு நனவாகும் நாள்.

 

துலாம்: எதிர்ப்புகள் அடங்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.

 

தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

 

விருச்சிகம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள்.

 

வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். வெற்றிக்கு வித்திடும் நாள்.

 

தனுசு: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு, சலிப்பு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள்.

 

வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் இருந்து வந்த பிரச்னைகள் கட்டுப் பாட்டிற்குள் வரும். நிம்மதியான நாள்.

 

மகரம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.

 

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.

 

கும்பம்: எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள்.

 

வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மறைமுக பிரச்னைகள் வரக்கூடும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

 

மீனம்: கடந்த கால சுகமான அனுபவங்களை, சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். சகோதரங்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள்.

 

வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். மதிப்புக் கூடும் நாள்.

 

இன்றைய ராசிபலன் – 25.09.2018

மேஷம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon