Primary Menu

Top Menu

September 26, 18

இன்றைய ராசிபலன் – 11.09.2018

மேஷம்: எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.

 

வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அமோகமான நாள்.

 


ரிஷபம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் தனித் திறமை களை கண்டறிவீர்கள். ஆடம் பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.

 

ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். புதுமை படைக்கும் நாள்.

 


மிதுனம்: எதிர்ப்புகள் அடங்கும். நட்பு வட்டம்விரியும். அரசு அதிகாரிகளின் உதவியால் சிலகாரியங்களை முடிப்பீர்கள். வேற்று மதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.

 

கடகம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமா வார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் சில நுணுக் கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

 


சிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பம் விலகும்.அழகு, இளமைக் கூடும். வாகனப் பழுது நீங்கும். உறவினர்கள் மதிப்பார்கள்.

 

வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

 


கன்னி: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச் சுமையால் பதட்டம் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். அதை பெரிது படுத்த வேண்டாம். அநாவசியமாக மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம்.

 

வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். பொறுமைத் தேவைப்படும் நாள்.

 


துலாம்: திட்டமிட்ட காரியங் களை அலைந்து முடிக்க வேண்டி வரும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம்.அரசாங்க விஷயம் தாமதமாகும்.

 

வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

 


விருச்சிகம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் பாராட்டப்படுவீர்கள். சிறப்பான நாள்.

 


தனுசு: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறை வேறும். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் வேலையாட்களால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். சாதிக்கும் நாள்.

 


மகரம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மன உளைச்சல் நீங்கி தெளிவு பிறக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உற்சாகமான நாள்.

 

கும்பம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தில்ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டிருக்காதீர்கள்.

 

நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோ கத்தில் அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

 


மீனம்: உங்களின் திறமை யை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவிவழியில் ஆதரவுப்பெருகும்.

 

வியாபாரத்தில் புது வாடிக் கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோ கத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

 

Comments

இன்றைய ராசிபலன் – 25.09.2018

மேஷம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon