Primary Menu

Top Menu

October 20, 18

அந்நியச் செலவாணி : இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு

சர்வதேச அந்நிய செலவாணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ந்து 69 ரூபாய் 5 காசுகளாக குறைந்துள்ளது.

 

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது.

 

அதிலும் ஜூன், ஜூலை ஆகிய இரண்டு மாதங்களில் இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவை சந்தித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இந்நிலையில் நேற்று மாலை அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 49 காசுகள் வீழ்ச்சியடைந்து ரூபாய் 69.05 காசுகளாக இருந்தது.

 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் இந்திய பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவு காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

வரும் நாட்களில் இந்திய ரூபாயின் மதிப்பு தொடர் சரிவை சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும் பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.

 

2016ம் ஆண்டு இந்திய ரூபாயின் மதிப்பு 68.86 ஆக இருந்ததே மிக குறைந்த அளவாக கருதப்பட்டது. ஆனால் இப்போது அதைவிட அதிகமாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

 

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon