Primary Menu

Top Menu

July 19, 18

தவறான திசையில் செல்லும் இந்திய பொருளாதாரம்

இந்தியப் பொருளாதாரம் தவறான திசையில் சென்று கொண்டிருப்பதாக நோபல் பரிசு பெற்ற பொருளியலாளர் அமர்த்தியா சென் தெரிவித்துள்ளார்.

 

டெல்லியில் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய அமர்த்தியா சென், இந்தியாவில் பொருளாதாரம் விரைவாக வளர்ச்சியடைவதாகக் கூறப்பட்டபோதிலும், 2014ஆம் ஆண்டில் இருந்து அது தவறான திசையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

 

20 ஆண்டுகளுக்கு முன் தெற்காசிய மண்டலத்தில் பொருளாதாரத்தில் இலங்கைக்கு அடுத்து இரண்டாவது சிறந்த நாடாக விளங்கிய இந்தியா, இப்போது மோசமான நாடுகள் பட்டியலில் பாகிஸ்தானுக்கு அடுத்து இரண்டாவதாக உள்ளது.

 

மக்களிடையே நிலவும் பொருளாதாரச் சமத்துவமின்மையைக் கண்டுகொள்ளாமல் அரசு விலகியிருக்கிறது.

 

சமூகத்தின் ஒரு பிரிவினர் அடுத்த வேளை உணவுக்கான உறுதி இல்லாமலும், நலவாழ்வு, கல்வி ஆகியவை இல்லாமலும் வாழ்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.

 

டோல்கேட் தடுப்புகளை கையால் உடைத்து சென்ற எம் எல் ஏ!!

டோல்கேட் பணியாளர்கள் தாமதப்படுத்தியதால்...

Leave a Reply