Primary Menu

Top Menu

September 21, 18

மட்டாலா சர்வதேச விமான நிலையத்தை இணைந்து நடத்த இந்தியா விருப்பம்

இலங்கையின் அம்பந்தோட்டையில் அமைந்துள்ள, மட்டாலா சர்வதேச விமான நிலையத்தை, அந்நாட்டு அரசுடன் இணைந்து நடத்த, இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது.

 

அண்டை நாடான இலங்கையின் அம்பந்தோட்டையில், முன்னாள் அதிபர் ராஜபக் ஷே ஆட்சி காலத்தில், சீனா உதவியுடன், மிகப் பெரிய துறைமுகம் கட்டப்பட்டது.

 

இந்த துறைமுகம் தற்போது குத்தகை அடிப்படையில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் ராஜபக் ஷே ஆட்சி காலத்தில் அம்பந்தோட்டை துறைமுகத்திற்கு மிக அருகில், மட்டாலா சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டது.

 

சீனாவிடம் நிதி உதவி பெற்று இந்த துறைமுகம் கட்டி முடிக்கப்பட்டது. எனினும் பாதுகாப்பு காரணங்கள், பராமரிப்பு செலவினங்களால் இந்த துறைமுகம் செயல்படாமல் முடங்கியுள்ளது.

 

இந்த விமான நிலையத்தை இலங்கை அரசுடன் இணைந்து நடத்த, சர்வதேச நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும், எந்த நாடும் இதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை.

 

இந்நிலையில் இந்த விமான நிலையத்தின் பெரும் பங்கை பெற்று இலங்கை அரசுடன் இணைந்து நடத்த இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளதாக, இலங்கை அமைச்சர், நிர்மல் ஸ்ரீபலா டி செல்வா, அந்நாட்டு பார்லிமென்ட்டில் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்த ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தானதும், விமான நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என்றும், அவர் தெரிவித்துள்ளார்.

 

பயணியர், சரக்கு விமானங்களை இயக்க கூடிய வகையிலான இந்த விமான நிலையத்தின் பெரும் பங்கினை இந்திய அரசு வாங்க உள்ளது.

 

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon