Primary Menu

Top Menu

April 24, 18

இயேசு உயித்தெழுதல் உண்மையில்லை: சர்ச்சையில் சிக்கிய இளையராஜா !!

இசைஞானி இளையராஜா இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுதல் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை கூறியதால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

கிறிஸ்தவ மக்களின் நம்பிக்கைகளில் ஒன்று இயேசுவின் உயிர்த்தெழுதல். சிலுவையில் அறையப்பட்ட இயேசு மூன்று நாட்கள் கழித்து உயிர்த்தெழுதலை ஈஸ்டர் பண்டிகையாக சந்தோஷமாக கொண்டாடுவார்கள். ஒவ்வொரு கிறிஸ்தவ மக்களின் அடிப்படை நம்பிக்கை அது.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இளையராஜா ரமண மகரிஷியின் மகிமை பற்றி பேசினார் அப்போது அவர் கூறியதாவது:

உலகத்திலேயே தோன்றிய ஞானிகளில் பகவான் ரமண மகிரிஷியைப் போல வேறு ஒருவர் கிடையாது. இயேசு உயிர்த்தெழுந்து வந்தார் என சொல்வார்கள். அடிக்கடி டாக்குமென்டரி பார்ப்பதை நான் வழக்கமாக கொண்டுள்ளேன்.

இதுவரை நான் பார்த்த டாக்குமென்டரிகளில் இயேசு இறந்தார், உயிர்த்தெழுந்து வந்தார் என்பதில் தான் கிறிஸ்தவமே நிற்கிறது. வளர்ந்து வந்தது, அந்த பாயிண்டை சொல்லி அப்படி ஒன்று நடக்கவில்லை என்று யூடியூபில் வரலாற்று ரீதியாக போடுகிறார்கள். ஆனால் உண்மையான உயிர்த்தெழுதல் நடந்தது ஒரே ஒருவருக்குத்தான். அது பகவான் ரமண மகரிஷிக்கு மட்டும்தான். உலகத்திலேயே அவருக்கு மட்டும் உயிர்த்தெழுதல் நடைபெற்றிருக்கிறது.

ஒட்டுமொத்த கிறிஸ்தவர்களின் மனதைப் புண்படுத்தியதாக இளையராஜா மீது கிறிஸ்தவ அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன. இசையமைப்பாளர் இளையராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிறிஸ்தவ நல்லிணக்க இயக்கம் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது. மேலும் இளையராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இளையராஜா வீட்டை முற்றுகையிட முயன்ற சிறுபான்மை மக்கள் நலக் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் தி.நகரில் உள்ள திருமண மண்படத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

ஒரு இசை சம்பந்தப்பட்ட விழாவில் கலந்துகொண்ட இளையராஜா தேவையற்ற முறையில் ரமண மகரிஷியின் மகிமை பற்றி பேசினார். அவர் ரமண மகரிஷியின் புகழ் பாடுவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை, ஆனால் அதற்காக உலகெங்கும் எல்லோரும் நம்பி உள்ள கிருத்துவ மக்களின் நம்பிக்கையை கொச்சைப்படுத்த வேண்டுமா? என முற்றுகையில் பங்கேற்றவர்கள் கேள்வி எழுப்பினர்.

 

Vaishali

Author of In4 Network from past 3 years, News and Articles with Genre of Cinema, Political, Sports, Business and General in the level of content is Tamilnadu, India and also Globally.

தளபதி விஜய் கண்ணாலே காதல் பேசும் மன்னன் – பிரபல ஆர்ஜே

நடிகர் விஜய் பள்ளியில் படிக்கும் போது...

Leave a Reply