Primary Menu

Top Menu

September 25, 18

ஈரானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : 2பேர் பலி

ஈரானின் கெர்மன்ஷா மாகாணத்தில் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள டெஸ்காபாத் நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கம் 6.1 புள்ளிகள் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. நிலநடுக்கத்தின் போது வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் கடுமையாக குலுங்கியது. நிலநடுக்கத்தால் 2 பேர் உயிர் இழந்ததாகவும், 200க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில்  பெரு – பிரேசில் எல்லையிலும்  சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம்  ரிக்டரில் 7.1 ஆக பதிவாகி உள்ளது.
Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon