Primary Menu

Top Menu

September 25, 18

சாகச பயணம் – பாய்மரப்படகில் உலகை சுற்றி வந்த பெண் அதிகாரிகளுக்கு உயரிய விருது

இந்திய கடற்படையில் பணியாற்றி வரும் 6 பெண் அதிகாரிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாய்மரப்படகு மூலம் உலகை சுற்றி வரும் சாகச பயணத்தை தொடங்கி கடந்த மே மாதம் நாடு திரும்பினர்.

 

6 கட்டங்களாக நடைபெற்ற இந்தப் பயணத்தில், எரிபொருள் நிரப்புவது, பராமரிப்பு பணிகள் ஆகியவற்றுக்காக, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மொரிஷியஸ் மற்றும் ஃபாக்லண்டஸ் ஆகிய நாடுகளின் துறைமுகங்களில் அந்தக் கப்பல் நிறுத்தப்பட்டது.

 

இந்த படகு 5 நாடுகளுக்கு சென்றுள்ளது. 4 கண்டங்களை தாண்டி, 3 பெருங்கடல்களை கடந்து 8 மாதங்களில் உலகை சுற்றி வந்து சாதனைப் படைத்துள்ளது.

 

லெப்டினண்ட் கமாண்டர் வர்திகா ஜோஷி தலைமையிலான கமாண்டர் பிரதிபா ஜம்வால், ஸ்வாதி, ஐஸ்வரியா போடாபதி, விஜய தேவி மற்றும் பாயல் குப்தா ஆகிய 6 பெண்கள் கொண்ட குழு இந்த சாதனையை புரிந்துள்ளது.

முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தாரினி படகு இந்த பயணத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது சிறப்புக்குரிய அம்சமாகும்.

 

இந்நிலையில், 6 பெண் அதிகாரிகளுக்கும் கடற்படையில் வழங்கப்படும் உயரிய விருதான நவ சேனா விருது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Comments

வங்கிகளின் வாராக்கடன் குறைவு – அருண்ஜெட்லி

மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon