Primary Menu

Top Menu

September 25, 18

பிரதமர் மோடியை கட்டிப்பிடித்த ராகுல் – பாசமா ? பதவி ஆசையா ?

மோடி தலைமையிலான மோடி அரசு பணக்காரர்களுக்கான அரசாக செயல்படுகிறது; ரபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளது என நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பேசும் போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றம்சாட்டினார்.

 

பிறகு மோடியின் இருக்கை நோக்கி சென்று, அவர் கையைப் பிடித்து குலுக்கி கட்டி அணைத்து விட்டு வந்தார் ராகுல்.

 

ராகுல் பேசியதாவது: மத்திய அரசின் அரசியல் பழிவாங்கலுக்கு ஆந்திரா பலியாகியுள்ளது. வெற்று வாக்குறுதியால், விவசாயிகள் தாழ்த்தப்பட்டவர்கள், பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைவரின் வங்கிக்கணக்கில் 15 லட்ச ரூபாய் போடப்படும் என மோடி கூறினார்.

 

2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றார். எதுவும் நடக்கவில்லை. இதுவரை 4 லட்சம் இளைஞர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 7 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது.

 

அம்பானி நிறுவனத்தில் மோடி புகைப்படம் இடம்பெற்றுள்ளது. கோட் சூட் போட்டவர்களுக்கான அரசாக மோடி அரசு உள்ளது. வெளிநாடுகளுக்கு செல்வதில் மட்டுமே மோடி ஆர்வம் காட்டுகிறார். மக்களின் பிரச்னைகளை தெரிந்து கொள்ள கிராமங்களுக்கு செல்வதில்லை. ஏழைகளுக்கு அவர் மனதில் இடமில்லை.

 

அமித்ஷா மகன் மீது ஊழல் புகார் உள்ளது. ஆனால் மோடி மவுனமாக உள்ளார். பிரதமர் பிரான்ஸ் சென்றார். ஆனால் ரபேல் விமானங்களின் விலை 1600 கோடி அதிகரித்துள்ளது. ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ரகசியம் காக்கப்படுவது ஏன்.

 

இந்த விவகாரத்தில் ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டு மக்களுக்கு பொய் கூறியுள்ளார். இதற்கு பிரதமரின் அழுத்தமே காரணம். நாட்டு மக்கள் உண்மையை தெரிந்து கொள்ள விரும்புகின்றனர்.

 

ரபேல் ஒப்பந்தத்திற்கு அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளதா? ரபேல் ஒப்பந்தத்தில், ரகசிய ஒப்பந்தம் உள்ளது என நிர்மலா கூறுகிறார். ஆனால், பிரான்ஸ் பிரதமர், என்னிடம் அவ்வாறு ஏதும் இல்லை என்றார்.

 

ரபேல் ஒப்பந்தம் மூலம் பிரதமரின் நண்பர் 45 ஆயிரம் கோடி பயனடைந்துள்ளார். பிரதமர் மோடி, தன்னை விளம்பபரப்படுத்தி கொள்ள யார் செலவை ஏற்று கொண்டிருக்கிறார்கள் என தெரியும். தொழில் அதிபர்களுக்கு சலுகை காட்டுவது ஏன் என விளக்க வேண்டும்.

 

பிரதமர் சிரிப்பதை நான் பார்க்கிறேன். ஆனால், அவரது புன்னகையில் பதற்றம் உள்ளது. என்னை பார்ப்பதை தவிர்க்கிறார். அதனை நான் புரிந்து கொள்ள முடிகிறது. எனது கண்களை அவரால் பார்க்க முடியவில்லை..இதற்கு அவர் உண்மையாக இல்லாமல் இருப்பதே காரணம்.

 

சீன அதிபருடன் பேச்சுவார்த்தையில் பிரதமர் தீவிரம் காட்டுகிறார். ஆனால், சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் வந்து செல்கிறது. இதற்கு, சீன அதிபரிடம் பிரதமர் கண்டனம் தெரிவிக்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

 

ராகுலின் பேச்சுக்கு நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சர் ஆனந்த குமார் எதிர்ப்பு தெரிவித்தனர். விதிகளை மீறி பேசுவதாக கூறினர். ராகுல் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க, எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

 

மோடியை கட்டியணைத்த ராகுல் : ஆவேசமாக பேசிய ராகுல், உரையை முடித்த உடன் மோடியின் இருக்கைக்கு சென்று அவரை கட்டியணைத்தார். கட்டி தழுவிய ராகுலுக்கு கைகுலுக்கி மோடி வாழ்த்து தெரிவித்தார்.

 

கண் அடித்த ராகுல்:

 

பேசி முடித்த பிறகு, இருக்கையில் அமர்ந்த ராகுலை, காங்கிரஸ் எம்பிக்கள் பாராட்டினர். அதற்கு அவர்களைப் பார்த்து, கண் அடித்து சிரித்தார்.

 

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon