Primary Menu

Top Menu

July 16, 18

அமுக்குவான் பேய் பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா?

நல்ல ஏசி அறையில் தனியாக தூங்கிக் கொண்டிருப்பீர்கள். திடீர் என்று ஏதோ ஒன்று அமுக்குவது போல் தோன்றும். அந்நேரத்தில் சுற்றி நடப்பது தெரியும், முளிப்புடன் இருப்போம்… ஆனால் எழுந்திரிக்க முடியாது. கை கால்களை அசைக்க கூட முடியாது.

 

யாரோ தரையோடு உடலை அமுக்கி இருக்கிப்பிடித்தது போல் இருக்கும். பிறகு சில நொடிகளில் மறைந்து போய்விடும். இதையெல்லாம் உங்கள் உறவினர் சொல்லும்போது கண்டிப்பாக பபயந்திருப்பீர்கள். அல்லது கெலி செய்திருப்பீர்கள்.

 

இப்படி நடந்தால் நீங்கள் தூங்கும் அறைக்குள் அமுக்குவான் பேய் உள்ளது என்று அர்த்தம். கொடூரமான பேய் இது!

 

ஒரே நேரத்தில் உலகில் உள்ள லட்சம் பேருக்கு தொல்லை கொடுக்கும் அளவிற்கு வல்லமை கொண்டது. அது எப்படி லட்சம் பேர் வீட்டில் ஒரே நேரத்தில் இருக்க முடியும்? ஹா..ஹா..ஹா!

 

சரி.! இங்கு அமுக்குவான் பேய் பற்றி ஆராய்ச்சியாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போமா?

 

இது பேய் பிசாசு எல்லாம் இல்லை! சில நொடிகள் நிகழும் தற்செயலான மனநிலை! மனிதர்கள் 10-ல் 4 பேர் இதை ஒருமுறையாவது சந்தித்திருப்பார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

 

இது தூக்கத்தில் வரும் பக்கவாதம் என்று கூறப்படுகிறது.

 

தூங்கும் போது தசைகள் ‘அலர்ட்னஸ்’ இல்லாமல் தளர்ந்து இருக்கும். ரத்த ஓட்டம் குறைந்து ஒரு குறிப்பிட்ட வேகத்தில் இயங்கும். இதன் போது மூளை மட்டும் முளித்துக்கொள்ளும். உடல் தூங்கிக்கொண்டிருக்கும்.

 

இப்போது மூளை கொடுக்கும் தகவலை தசைகள் ஏற்காது. இதனால் அசைய நினைப்போம். ஆனால் அசைய முடியாமல் போய்விடுகிறது.

 

இது ஏன் நிகழ்கிறது?

 

இப்படி நடக்க மனஉளைச்சல், மன அழுத்தம், பயந்து போன உணர்வுடன் தூங்குவது முதல் காரணம். முடிந்த வரை ஜன்னல்கள் அடைத்த அறைகளில் தூங்காதீர்கள்.

 

தூங்கும் அறையில் ஆக்சிஜன் குறைந்த நிலையில், மூச்சு தினறல் ஏற்படும். இது பெரும்பாலும் பக்கவாதம் வந்த முளிப்பு நிலைப்போல் தோன்றும்.

 

மேலும் சில தகவல்…

 

இந்த தூக்கதிதுல் ஏற்படும் பக்கவாதம் வரும்போது கெட்ட கனவுகளுடன் ஆபத்து நிலவும் உணர்வுகள் தோன்றும். இது சிலருக்கு 10 வினாடி முதல் இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் நிலவும். சிலருக்கு சில நிமிஷங்கள் கூட நீடிக்கும்.

 

இவை எப்போவாவது நடந்தால் பயப்பட தேவையில்லை. அடிக்கடி வருமானால் உடனே மனநல மருத்துவரை அனுகுவது மிகவும் நல்லது.

 

மனைவியிடம் கோபிக்காதீர்கள்!

நாம் செய்த நல்வினை, தீவினை ஒன்றுக்கு...

Leave a Reply