Primary Menu

Top Menu

October 20, 18

புதிய நிறத்தில் பிக்சல் 3 ஸ்மார்ட்போன்கள்

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 3 ஸ்மார்ட்போன்கள் இன்னும் சில வாரங்களில் அறிமுகமாக இருக்கும் நிலையில், பிக்சல் 3 மாடல்கள் புதிய நிறங்களில் உருவாக்கப்படுவது தெரியவந்துள்ளது.

 

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 3 ஸ்மார்ட்போன்கள் அக்டோபர் 9-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

 

பிக்சல் 3 ஸ்மார்ட்போன்களின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், புதிய கூகுள் ப்ரோமோ பக்கத்தில் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போனக்ளின் நிறம் தெரியவந்துள்ளது.

 

புதிய டீசர் withgoogle.com என்ற இணைய முகவரி கொண்ட கூகுள் வலைத்தளத்தில் மிகவிரைவில் (coming soon) என்ற வார்த்தையுடன் இடம்பெற்று இருந்தது.

 

வழக்கமான டூயல்-டோன் கருப்பு வெள்ளை நிறங்கள் தவிர இம்முறை புதிதாக மின்ட் நிறம் இடம்பெற்றிருக்கிறது.

 

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பிக்சல் 2 XL மாடலில் இருந்த ஆரஞ்சு நிற பவர் பட்டன் இம்முறை மின்ட் நிறம் கொண்டிருக்கிறது. இத்துடன் பக்கவாட்டுகளிலும் மின்ட் நிறம் கொண்ட பிக்சல் 3 புகைப்படங்கள் ஏற்கனவே இணையத்தில் லீக் ஆகியிருந்தன.

 

டீசரில் உள்ள புகைப்படத்தின் படி பிக்சல் 3 மாடல்களிலும் டூயல்-டோன் ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது.

 

இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி பிக்சல் 3 மாடலில் நாட்ச் இல்லாமல் 5.5 இன்ச் 2160×1080 பிக்சல் 18:9 டிஸ்ப்ளே, டூயல் முன்பக்க ஸ்பீக்கர், கிளாஸ் + மெட்டல் பேக், பின்புறம் கைரகை சென்சார்,

 

ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி, டூயல் 8.1 எம்.பி. செல்ஃபி கேமரா, F/1.8 மற்றும் F/2.2 மற்றும் 2915 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என கூறப்படுகிறது.

 

பிக்சல் 3XL மாடலில் 6.2 இன்ச் 1440×2960 பிக்சல் 19:9 ரக டிஸ்ப்ளே, நாட்ச், டூயல் முன்பக்க ஸ்பீக்கர், கிளாஸ் + மெட்டல் பேக், பின்புறம் கைரகை சென்சார், ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி,

 

டூயல் 8.1 எம்.பி. செல்ஃபி கேமரா, F/1.8 மற்றும் F/2.2 மற்றும் 3430 எம்.ஏ.ஹெச். பேட்டரி, வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

 

இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் யு.எஸ்.பி. டைப்-சி ஹெட்போன்களுடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் இதர விவரங்கள் அடுத்த மாதம் தெரியவரும்.

 

வழக்கம்போல் இந்த ஆண்டும் கூகுள் தனது ஹார்டுவேர் நிகழ்வினை யூடியூப் சேனலில் நேரலை செய்யும்.

 

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon