Primary Menu

Top Menu

September 25, 18

பாலின சமத்துவத்தை வலியுறுத்தி அரைநிர்வாண கொண்டாட்டம்

பெண்ணுரிமை போராட்டங்களும் பாலின சமத்துவத்திற்கு வித்தியாசமான ஊர்வலங்களும் மேற்கத்திய நாடுகளில் நடப்பது இயல்பானதே. ஆகஸ்டு 26 பெண்கள் சமத்துவ தினமாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

 

பாலின சமத்துவத்தை வலியுறுத்துவதற்காக ’டாப்லெஸ் டே’ (Topless day) கொண்டாடப்படுகிறது. மேலாடையில்லாமல் பெண்கள் பலர் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

 

அமெரிக்கா மட்டுமல்லாமல் ஜெர்மனி, கனடா, சிலி, கொலம்பியா மற்றும் பிரான்ஸ் நாடுகளில் ‘கோ டாப்லஸ்” என்கிற அறிவிப்புப் பலகையுடன் பலர் ஊர்வலமாகச் சென்றுள்ளனர்.

 

அமெரிக்காவில் இந்த ஊர்வலத்தில் சிலர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். ஆண்களும் பெண்களும் சட்டையின்றி நடந்து சென்றனர்.

 

”சட்டையின்றி ஒருபெண் தெருவில் சென்றால் அவர்களை சமூகம் மரியாதையுடன் பார்க்கவேண்டும்.

 

அதுதான் சமூகத்தின் ஆரோக்கியமான பார்வையாக இருக்கும்” என்று ஊர்வலத்தில் பங்கேற்ற நபர் கூறினார்.

 

நியூயார்க்கில் 1994-ம் ஆண்டு பெண்கள் சட்டையின்றி வெளியில் செல்லலாம் என்று சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டது.

 

ஆனால், மற்ற நகரங்களிலோ, மாகாணங்களிலோ இதற்கு அனுமதியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon