Primary Menu

Top Menu

July 17, 18

ஆஸ்திரேலியாவின் சுற்றுலா தள நதியில் இராட்சத முதலை!

ஆஸ்திரேலியாவின் வடக்கு மாகாணத்தில் கேத்ரீன் நதி பாய்ந்தோடுகிறது. நாட்டின் மிக முக்கிய ஆறுகளில்இதுவும் ஒன்று.

 

சுற்றுலா தளமாக விளங்கும் இப்பகுதியில் கேத்ரீன் என்ற நதியில் உப்புநீர் எனப்படும் ராட்சத முதலைகள் அதிகளவில் உள்ளன. இந்த முதலைகளால் அப்பகுதி மககளுக்கு அச்சுறுத்தலாக இருந்தது.

 

அவற்றை பிடிப்பதற்கான முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று அப்பகுதி நதியை கண்காணித்துக்கொண்டிருந்த போது ராட்சத ஆண் முதலை ஒன்று பிடிப்பட்டது.

 

இந்த முதலையை தான் கடந்த 8 ஆண்டுகளாக தேடி வந்தனர். பிடிப்பட்ட முதலை சுமார் 600 கிலோ இருந்ததாக கூறப்படுகிறது.

 

வைரலாகும் சர்கார் படத்தில் யோகி பாபுவின் புதிய கெட்-அப்!

சர்கார் படத்தில் நடிக்கும் யோகி பாபுவின்...

Leave a Reply