Primary Menu

Top Menu

October 16, 18

பேஸ்புக் போர்டல் பிளஸ் பெயர்களில் வீடியோ காலிங் சாதனம் அறிமுகம்

ஃபேஸ்புக் நிறுவனம் போர்டல் மற்றும் போர்டல் பிளஸ் பெயர்களில் புதிய வீடியோ காலிங் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது.

 

ஃபேஸ்புக் நிறுவனத்தின் இரண்டு புதிய சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

 

போர்டல் மற்றும் போர்டல் பிளஸ் என அழைக்கப்படும் இரண்டு சாதனங்களும் வீடியோ கால் மேற்கொள்ளக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

 

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டிருக்கும் புதிய சாதனங்களில் மிக எளிமையாக வீடியோ கால் மேற்கொள்ள முடியும்.

 

போரடல் சாதனத்தில் 10 இன்ச் ஹெச்.டி. 1280×800 பிக்சல் டிஸ்ப்ளே, போர்டல் பிளஸ் சாதனத்தில் 15 இன்ச் ஃபுல் ஹெச்.டி. 1920×1080 பிக்சல் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

 

இத்துடன் ஏ.ஐ. போர்டல் ஸ்மார்ட் கேமரா மற்றும் ஸ்மார்ட் சவுன்ட் தொழில்நுட்பம் சாதனத்தை தொடாமல் பயன்படுத்த முடியும்.

 

ஸ்மார்ட் கேமரா திரையில் உள்ள அனைவரும் தெரியும் படி தானாக சூம் மற்றும் அசைந்து கொள்ளும். ஸ்மார்ட் சவுன்ட் அம்சம் பின்னணி சத்தத்தை குறைத்து, குரல் ஒலி அளவை உயர்த்துகிறது.

 

போர்டல் சேவை கொண்டு ஃபேஸ்புக் நண்பர்கள் மற்றும் கனெக்ஷன்களை மெசன்ஜரில் இருந்து அழைப்பு மேற்கொள்ள முடியும்.

 

மேலும் இந்த சாதனம் க்ரூப் கால் மேற்கொள்ளும் வசதியும், ஒரே நேரத்தில் அதிகபட்சம் ஏழு பேருடன் க்ரூப் கால் செய்ய முடியும். இத்துடன் போர்டல் சாதனத்தில் அமேசான் அலெக்சா சேவை வழங்கப்பட்டு இருக்கிறது.

 

இதனால் விளையாட்டு நிகழ்வுகள், வானிலை நிலவரம் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்வதோடு ஸ்மார்ட் ஹோம் சாதனங்களை இயக்க முடியும்.

 

அமெரிக்காவில் போர்டல் மற்றும் போர்டல் பிளஸ் சாதனங்கள் முன்பதிவு செய்யப்படுகிறது. பயனர்கள் ஃபேஸ்புக்கின் portal.facebook.com மற்றும் அமேசான் வலைதளத்தில் முன்பதிவு செய்ய முடியும். இதன் விநியோகம் நவம்பர் மாதத்தில் துவங்குகிறது.

 

போர்டல் ஹோம் விலை 199 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.14,717) என்றும் போர்டல் பிளஸ் விலை 349 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.25,810) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon