Primary Menu

Top Menu

September 22, 18

40 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு உலகக்கோப்பை போட்டியில் துனிசியா வெற்றி

ரஷ்யாவில் தற்போது நடைபெற்றுவரும் கால்பந்து உலகக்கோப்பைத் தொடரின் குரூப் ‘ G’ பிரிவில் , இன்னும் ஒரு போட்டியில் கூட வெல்லாத பனாமா மற்றும் துனிசியா அணிகள் தங்களின் முதல் வெற்றிக்காக இன்று போட்டியிட்டன.

 

33-வது நிமிடத்தில் துனிசிய வீரர் ஓன் கோல் அடிக்க ‘வெற்றி நமதே!’ என்று சுற்றிக்கொண்டிருந்த பனாமாவுக்கு, இரண்டாம் பாதி இடியை இறக்கிவிட்டது.

 

இரண்டாம் பாதியில் தொடர்ந்து இரண்டு கோல்களை அடித்து, உலகக்கோப்பையில் தனது வெற்றியைப் பதிவுசெய்துவிட்டது துனிசியா.

 

உலகக்கோப்பையில் அந்த அணி முதல்முறையாகப் பங்கேற்ற 1978-ம் ஆண்டு மெக்ஸிகோவுடன் 3-1 என்ற கோல் கணக்கில் வென்றிருந்தது.

 

அதன் பிறகு 40 ஆண்டுகள் கழித்து உலகக்கோப்பைப் போட்டியில் துனிசியாவுக்குக் கிடைக்கும் வெற்றி இதுவாகும்.

 

துனிசியாவின் ஆட்டத்தை ஒப்பிடும்போது இந்தப் போட்டியில் பனாமா பிளேயர்கள் நன்றாக ஒருங்கிணைந்து விளையாடினார்கள். இரண்டாம் பாதி தொடங்குவதற்கு முன்புவரை பனாமாவுக்கு வெற்றி என்ற நம்பிக்கையே இருந்தது.

 

இரண்டாம் பாதி தொடங்கிய 6-வது நிமிடம் பென் யூசெஃப் கோல் போஸ்ட்டுக்கு அருகே இருந்து கோல் அடித்து ஸ்கோரை சமன் செய்தார்.

 

பெல்ஜியம் அணியுடன் நடைபெற்ற போட்டியில் கோல் அடித்த வாபி காஸ்ரி, 66-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடித்து துனிசியாவை வெற்றிப்பாதைக்குக் கொண்டுசென்றார்.

 

கடைசி வரை கோல் போட்டு மேட்சை சமன் செய்யப் போராடிய பனாமாவால், கோல் எதுவும் அடிக்க முடியாமல் தோல்வியுற்றது.

 

கால்பந்து உலகக்கோப்பையில் முதல்முறையாகக் கலந்துகொண்ட பனாமா வெற்றியைப் பதிவு செய்யாமலேயே லீக் போட்டிகளோடு வெளியேறியது.

 

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon