Primary Menu

Top Menu

September 26, 18

தேயிலை வரத்து குறைவால் ஏற்றுமதியாளர்கள் பாதிப்பு

தென்னிந்தியாவில் உள்ள கோவை, குன்னூர், கொச்சி ஆகிய தேயிலை வர்த்தக மையங்களில் கடந்த 3 வாரமாக தேயிலைத்தூள் வரத்து 25 சதவீதம் குறைந்துள்ளதால், விலை கிலோவிற்கு ரூ.16 வரை உயர்ந்துள்ளது. இதனால் ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

தமிழகம், கேரளாவில் உள்ள மலை தோட்டங்களில் உற்பத்தியாகும் தேயிலைத்தூள், தென்னிந்தியாவிலுள்ள கோவை, குன்னூர் மற்றும் கொச்சி ஆகிய தேயிலை வர்த்தக மையங்களில் வாரம்தோறும் நடைபெறும் ஏலத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

 

இங்கிருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்கள் கொள்முதல் செய்கின்றனர்.

 

இந்நிலையில், கடந்த 3 வாரமாக, வாரம்தோறும் சராசரியாக கோவைக்கு 2 லட்சம் கிலோவும், குன்னூருக்கு 11 லட்சம் கிலோவும், கொச்சிக்கு 12 லட்சம் கிலோவும் தேயிலைத்தூள் வரத்து நிலவுகிறது. இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களோடு ஒப்பிடுகையில் 25 சதவீதம் குறைவாகும்.

 

தற்போதைய வரத்து குறைவால், வர்த்தகர்கள் போட்டி போட்டுக் கொண்டு தேயிலை துாளை வாங்கி வருகின்றனர். இதனால் வாரத்தில் 90 சதவீதம் அளவிலான தேயிலைத்தூள் விற்பனையாகிறது.

 

இது கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் விற்பனை 25 சதவீதம் அதிகமாகும். 3 இடங்களிலும் தேயிலைத்தூள் விலை உள்நாடு ரகம் கிலோ ரூ.113க்கும், ஏற்றுமதி ரகம் ரூ.103க்கும் விற்பனையாகிறது.

 

இது கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் உள்நாடு ரகம் ரூ.16 அதிகமாகவும், ஏற்றுமதி ரகம் ரூ.13 அதிகமாகவும் உள்ளது. கடந்த ஆண்டு ஏற்றுமதி ரக விலையின் உத்தேசத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஆர்டர் பெற்றிருந்த ஏற்றுமதியாளர்களுக்கு கிலோவிற்கு ரூ.10 வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

 

உள்நாடு ரகம் விலை உயர்வால், உள்நாட்டில் விற்கப்படும் தேயிலைத்தூள் விலையும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை தேயிலை வர்த்தக மைய செயலாளர் ஸ்ரீகுமார் கூறியதாவது:

 

ஆகஸ்ட் மாதத்தில் கேரளா மற்றும் தமிழகத்தில் நீலகிரி மாவட்டம், கோவை மாவட்டம் வால்பாறை ஆகிய பகுதிகளில் பெய்த தொடர் மழையால், அங்குள்ள தேயிலை செடிகள் பாதிப்படைந்து, பசுந்தேயிலை உற்பத்தி குறைந்தது. இதனால் வரத்து 25 சதவீதம் குறைந்துள்ளது.

 

Comments

வங்கிகளின் வாராக்கடன் குறைவு – அருண்ஜெட்லி

மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon