Primary Menu

Top Menu

August 15, 18

ஐரோப்பாவில் கடும் பனிபொழிவால் 55 பேர் உயிரிழந்தனர்

ஐரோப்பாவில்  கடும் பனிபொழிவால் 55-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் கடும் பனி நிலவி வருகிறது. பனிப்புயல் மற்றும் கடும் பனிப் பொழிவால் அனைத்து சாலைகள், ரயில்வே சேவைகள் மற்றும் பள்ளிகள் மூடப்பட்டன. மேலும் விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

கடும் குளிரால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. போலந்தில் 21 பேர், ஸ்லோவேகியாவில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.  ஏழைகள், வீடற்றவர்கள் இந்த  பனிப்புயலால் பாதிக்கப்படுவார்கள் எனவும், முதியவர்கள், குழந்தைகள், நீண்ட காலமாக நோயால் பாதிக்கப்பட்டு வருபவர்கள், மாற்று திறனாளிகள் மற்றும் மனநிலை குறைபாடு உள்ளவர்கள் குளிர் தொடர்பான உபாதைகளுக்கு உள்ளாகும் ஆபத்து அதிகமாக உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிக்கை விடுத்துள்ளது.

இன்று பனிப்புயல் கடந்து செல்லும் வரை மக்கள் வெளியே வருவதை தவிர்க்குமாறு அயர்லாந்து பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments
மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon