Primary Menu

Top Menu

October 20, 18

கல்யாண கனவு

அனைவரும் பூஜாவை அலங்கரிக்க தொடங்கினர். பூஜாவோ தன் நினைவு அலைகளை மிதக்கவிட்டால்.

 

நாம் எடுத்த முடிவு சரியா அல்லது தவறா? என்று அவளது மனதுக்கும் முளைக்கும் ஒரு உலக யுத்தமே

 

நடந்தது. தனது நீண்ட நாள் கனவுகளை களைத்து தாய் தந்தையிற்காக திருமணதிற்கு சம்மதம் தெரிவித்தது சரியா அல்லது தவறா??

 

என் வாழ் நாள் முழுதும் என்னுடன் தொடர போகும் என் கணவரிடம் இரண்டு முறையே பேசினோம். அவரும் என் கனவுகளை நிறைவேற்றுவேன் என்று வாக்களித்தார். சொன்ன வார்தையை நிறைவேற்றுவரா அல்லது மற்ற கணவரைப் போல் கல்யாணத்திற்கு

 

பிறகு வேறு மாறி நடந்துகொள்வாரா?

 

என் தோழி, பெற்றோர்களுடன் இதுப் போல் இனி இருக்க நேரிடுமா, அல்லது அவர்களை விட்டு தொலை தூரம் செல்ல நேரிடுமா???

 

எனக்கு வரும் மாமியார் மாமனார் என்னை அவர்கள் மகள் போல் நடத்துவார்களா? அல்லது மாமியார் மாமனார் கொடுமைகள் நேரிடுமா??

 

இவ்வாறாக ஒவ்வொரு கல்யாண பெண்களுக்கும் இருக்கும் குழப்பமும் அச்சமும் அவளுக்கும் இருக்க நேர்ந்தது. இப்படி அவள் நினைவு அலைகள் மிதக்க அவளை அறியாமல் அவள் ராகுலை பற்றியும் எண்ண தொடங்கினாள்.

 

கடவுளே இந்த ராகுலுக்கு இனிமேலாவது நல்ல புத்தியை கொடு. அவன் வாழ்வில் வளரவும், பலசை மறக்கவும் நீ தான் அவனுக்கு உதவ வேண்டும் என்று எண்ணி கொண்டிருக்கும் வேலையில் தீடீர் என்று மேல தாளங்கள், வான வேடிக்கை பட்டாசு சத்தம் கேட்டது.

 

அவ்வோசையில் பூஜாவின் நினைவு அலைகள் துண்டிக்கப் பட்டது. அவளது தோழிகளும் பூஜாவிடம் உனது ராஜ குமாரன் வந்து விட்டான் என்று அவளை கிண்டல் செய்ய ஆரம்பித்தார்கள்.

 

பல எண்ணங்கள் தன்னை சூழ்ந்திருக்க பூஜாவிர்க்கோ பொய்யாக கூட சிரிக்க இயலவில்லை.

 

நம் ஒவ்வொரு நுனி அசைவிற்கும் அர்த்தம் தெரிந்தவர்களுள் ஒருவர் உண்மையான நண்பன். அப்படிப் பட்ட ஒரு தோழி தான் ராணி.

 

பூஜாவின் நிலையைக் கண்டு ராணியோ அவர்களின் மற்ற தோழியை திசை மாற்ற ‘நீங்கள் அனைவரும் ஏன் நம் வருங்கால அத்தானை வம்பு இழுத்து நம் கெத்தை காமிக்க கூடாது’ என்று கூறி அனைவரையும் வெளி அனுப்பினார். அவர்களும் எப்படி எல்லாம் வம்பு இழுக்க வேண்டும் என்று தங்குளுக்குள் பேசி கொன்டே சென்றனர்.

 

அவர்கள் சென்றவுடன் ராணி பூஜாவை கட்டி அணைத்து கொண்டாள். பின் அவள் முதுகை தடவி கொடுக்க ஆரம்பித்தாள்.

 

பூஜாவிர்க்கோ இது வரை அவளிடம் இருந்த அச்சங்களும், குழப்பங்களும் தீரவில்லை என்றாலும், அவள் தோழி அவளை கட்டி அணைத்தவுடன் அவள் மனது பஞ்சுப் பொல் மென்மையானது.

 

அவள் முதுகை வருடியவாரே ராணி ” பூஜா, எதைப் பற்றியும் நினைக்காதே, உன் நல்ல மனதிற்கு உன் கல்யாண வாழ்க்கை நல்லதாகவே அமையும்.

 

ராகுல் பற்றிய கவலையை என்னிடம் விட்டு விடு நான் பார்த்துகொள்கிறேன்” என்றாள்.

 

இதை கேட்டவுடன் பூஜாவிற்கு திகைப்பு தாங்க இயலவில்லை. உடனே பூஜா ராணியை நோக்கி ” உனக்கு எப்படி நான் என்ன நினைச்சிக்கிட்டு

 

இருக்கேன்னு தெரியும்”

 

“அட போடி, இது என்ன பெரிய மேஜிக்கா? நாலு வருஷம் காலேஜ்ல வாத்தியாரோட பாடத்த கேட்டதோட உன்னோட புலம்பல கேட்டது தான அதிகம் அப்புறம் இது கூட தெரிலனா??” என்று நக்கலாக அவள் பதில் சொல்ல

 

” இல்லனா மட்டும் நீ பாடத்த கவுன்சிருவப் பாரு? எப்படியும் தூங்கிட்டு தான இருப்ப?” என்று பூஜா பதில் கூற இவர்களின் பேச்சு செல்ல சனடையாக மாற இறுதியில் பூஜா தன் அச்சத்தையும் குழப்பத்தையும் மறந்து சிரிக்க தொடங்கினாள்.

 

அதனைப் பார்த்து ராணி “எப்போதும் இப்படியே சிரித்து கொண்டிரு டி அது தான் உனக்கு அழகு” என்று கூறினாள்

 

உடனே பூஜா சிறிது கூட தயங்காமல் “அதற்கு , நீ என் அருகில் எப்பொழுதும் இருக்க வேண்டும் டி ” என்று கூற அவளோ ” அதற்கென்னடி நான் உன் புருஷனை ரெண்டாம் தரமாக கல்யாணம் செய்து கொள்கிறேன்” என்று நக்கலாக ,கூற பூஜா ராணியின், காதை திருக தொடங்கினாள்.

 

ராணியோ வழி தாங்க இயலாமல் கத்தி கொண்டிருக்கும் வேலையில் பூஜாவின் அம்மா வந்து ” ரெண்டு பெரும் ஒன்னு செந்த போதுமே உலகத்தையே மறந்துட வேண்டியது.

 

மாப்பிள்ளை வீட்ல இருந்து எல்லோரும் வந்துட்டாங்க. ராணி இப்போதாவது உன் குறும்பு தனத்த ஒதுக்கி வெச்சுட்டு பூஜாவ குட்டிக்கிட்டு கீழ வா” என்று செல்லமாக அதட்ட ராணியோ அசடு வழிய தன் சிரிப்பை அடக்கி கொண்டு சரி மா என்று பதில் அளித்தாள்.

 

பூஜாவின் அம்மா கீழ் இறங்கி சென்றவுடன், ராணி பூஜாவை நோக்கினாள், பூஜாவோ அச்சத்தில் நடுங்க தொடங்கினாள். ராணி அதனை அறிந்து அவள் கைகளை பற்றி தன் இதழின் புன்னகையின் மூலம் அவளுக்கு நம்பிக்கை கொடுத்தாள்.

 

பூஜாவும் தன் தோழியின் கரங்களைப் பற்றி கொண்டு , அவள் கொடுத்த நம்பகையுடன் கீழ் இறங்க தொடங்கினாள்.

 

மகிழ்ச்சியை தவறவிடாதீர்கள்?

படித்து முடித்தால் மகிழ்ச்சியாக...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon